தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/பத்ராசனம்

பத்ராசனம்

பத்ராசனம்


PUBLISHED ON : ஜூலை 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

செய்முறை:

1 தரையில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டி கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும்.

2 இரண்டு கால்களையும் பக்கவாட்டில் மடக்க வேண்டும். உள்ளங்கால் பாதங்கள், இரண்டும் ஒன்றுடன், ஒன்று சேர்ந்தவாறு கால்களை மடக்கி வைக்க வேண்டும்.

3 இரண்டு கால்களையும் (கைகளை கும்பிடுவது) போல் பரப்பி வைக்க வேண்டும்.

4 இரண்டு கைவிரல்களை கோர்த்தவாறு கூப்பி வைத்த கால்விரல்களை பிடித்துக் கொள்ள வேண்டும்.

5 முதுகை நிமிர்த்தி நேராக உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

6 இரண்டு கால் தொடைகளையும் மேலும், கீழும் வண்ணத்துப்பூச்சி சிறகை ஆட்டி பறப்பது போல் ஆட்டிக் கொண்டே தரையை தொட முயற்சிக்கவும்.

கால அளவு: வண்ணத்துப்பூச்சி சிறகை விரித்து பறப்பது போன்று, இரண்டு தொடைகளையும் மெதுவாக மேலும், கீழும் அசைத்து, 20 முறைகள் செய்ய வேண்டும். பின் கால்களை நேராக நீட்டி ஓய்வு எடுக்க வேண்டும். இந்த மாதிரி 3 முறைகள் செய்ய வேண்டும்.

மூச்சு: கால்களை மேலும், கீழும் அசைக்கும் போது, சாதாரண மூச்சில் இருக்க வேண்டும். 20 முறை ஆட்டிய பின் இரண்டு கால்களையும் நேராக நீட்டி 2 முறை ஆழ்ந்த மூச்சு இழுத்துவிட்டு ஓய்வு எடுக்க வேண்டும்.

பலன்கள்: சிறுநீர்ப்பை பலம் பெற உதவும்.

ஆண்களுக்கான பிராஸ்டேட் உறுப்பு சார்ந்த பிரச்னைகளுக்கு பலன் தரும் ஆசனம்.

கருவுற்ற பெண்கள், இந்த ஆசனத்தை செய்தால், சுகப் பிரசவம் நடைபெற உதவியாக இருக்கும்.

குறிப்பு: கால் முட்டி பிரச்னை உள்ளவர்கள், கால்களை மடக்கி பக்கத்தில் வைப்பதை தவிர்த்து,

ஒரு அடி முன்னால் தள்ளி வைத்து செய்யலாம். ஆரம்ப நிலையில், இரண்டு தொடைகளும் தரையில் தொடர்ந்து பயிற்சி செய்ய, சில நாட்களோ அல்லது மாதங்களோ ஆகும்.

- டாக்டர் வீ.கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி யோகா பவுண்டேஷன், சென்னை. 93810 32012

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us