தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/துப்புரவாளர்கள் எனும் சிறுநீரகங்கள்

துப்புரவாளர்கள் எனும் சிறுநீரகங்கள்

துப்புரவாளர்கள் எனும் சிறுநீரகங்கள்


PUBLISHED ON : ஜூலை 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு மனிதனின், உடம்பு ஆரோக்கியமாய் இருக்கிறது என்றால், அதற்கு காரணம், உடம்பில் இருக்கும் இரண்டு துப்புரவாளர்கள்தான். யார் அவர்கள்? சிறுநீரகங்கள் தான்.

நம் அடிவயிற்றுக்கு, பின்னாலும், முதுகுத் தண்டுவடத்துக்கு முன்பாகவும், பக்கத்துக்கு ஒன்றாக, சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. ரத்தத்தில் சேரும் உடலின் கழிவுகளை சுத்திகரித்து, சிறுநீரக

நாளத்தின் வழியே வெளித்

தள்ளுவது, சிறுநீரகத்தின் வேலை.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும், ரத்தத்தை வடிகட்டும், நுண்ணிய குழாய்கள் உள்ளன. இந்த நுண்ணிய குழாய்களுக்கு, 'நெப்ரான்கள்' என்று பெயர். ஒவ்வொரு சிறுநீரகமும், 12 லட்சம் நெப்ரான்களைக் கொண்டிருக்கும். சத்துப் பொருட்களை உறிஞ்சி, உடம்புக்கு தேவையில்லாத கழிவுப் பொருட்களை, வெளியே தள்ளும் ஆற்றல், நெப்ரான்களுக்கு உண்டு.

சிறுநீரகங்களில் இருக்கும், 12 லட்சம் நெப்ரான்கள், ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடம்பிலிருந்து, 120 லிட்டர் திரவத்தை தினமும் வடிகட்டுகிறது. ஒரு சிறுநீரகம் பழுதானாலும் கூட, மற்றொரு சிறுநீரகத்தின் உதவியோடு மனிதர்களால் வாழ முடியும். ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பட்டாலும், இரண்டு சிறுநீரகங்களின் பணிகளைச் செய்யும். ஆனால், கடுமையான பணியின் காரணமாக, நுண்ணிய நெப்ரான்கள் அளவில் பெரியதாகிவிடும். ஒவ்வொரு மனிதனின், 40 வயதுக்குப் பின் ஆண்டுதோறும் ஒரு சதவீத நெப்ரான்கள் அழியும். அப்படி அழிந்தாலும், எண்ணிக்கைக்கு ஏற்ப நெப்ரான்கள் விரிவடைந்தும் மறு உற்பத்தி செய்யப்பட்டும் சமன் செய்யப்படுகின்றன.

- சிவநாதன்,

சிறுநீரகவியல் நிபுணர், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us