sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இல்லத்தரசிகள் இனிமையாக வாழ வேண்டும்!

/

இல்லத்தரசிகள் இனிமையாக வாழ வேண்டும்!

இல்லத்தரசிகள் இனிமையாக வாழ வேண்டும்!

இல்லத்தரசிகள் இனிமையாக வாழ வேண்டும்!


PUBLISHED ON : ஆக 29, 2010

Google News

PUBLISHED ON : ஆக 29, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களுக்கு வரும் முக்கிய சில நோய்களாக, இதய நோய், மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய், சுண்ணாம்பு சத்து குறைவால் வரும் ஆஸ்டியோ ஆர்த்தரைட்டீஸ், ஆஸ்டியோ போரோசிஸ் ஆகியவை கருதப்படுகின்றன.  குடும்ப பாரம்பரிய நோய்களான ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அதிக கெட்டக் கொ ழுப்பு (எச்.டி.எல்.,), டி.ஜி.எல்., ஆகியவை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி குறைவால் வருபவை. பெண்களுக்கு, இவற்றை பற்றி தெளிவான அறிவு தேவை. பெண்களுக்கு வரும் இதய நோய்கள் பல. 25 வயதுக்கு மேலான பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோ யை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

பெண்களில் 28, 30, 35 வயதுடையோர், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். இதில், சில டாக்டர்களின் இளம் மனைவிகளும் அடங்குவர். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சுரக்கும் ஈஸ்டிரோஜன் என்ற ஹார்மோன், இதயத்தை காப்பாற்றுகிறது.

இப்போது, பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டு வேலை, வேலைக்கு செல்லும் போது ஏற்படும் போட்டி, வேலை நேரத்தில் ஆண் சகாக்களோடு ஏற்படும் உறவு, உரசல், விரிசல்.  இதனால் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல், உடல் சோர்வு போன்றவை ஈஸ்டிரோஜனின் இதயம் காக்கும் பணியை தடுப்பதால், மாரடைப்பு வருகிறது. இரவு, பகல் வேலை பளு, மசாலா உணவுகள், குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள், சமூக சேர்க்கையால் மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகிய அனைத்தும், இதய நோய் விரைவில் வர வழி வகுக்கின்றன. பெண்கள், இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்தக்குழாய் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவைகளில் இரண்டு வகை; ஒன்று, அடைப்பால் ஏற்படும் மார்பு வலி அல்லது மாரடைப்பு; இரண்டாவது வகை, ரத்த நாள சுருக்கம்.  ஆண்களைப் போல பெண்கள், தெளிவாக நெஞ்சுவலி என்று கூற மாட்டார்கள். 'காஸ் அடைக்கிறது, ஜீரண கோளாறு; சாப்பிட முடியவில்லை, ஏப்பம்...' என்று தான் கூறுவர். இதற்கு, 'காஸ் மாத்திரைச் சாப்பிட்டதும் சரியாகி விடுகிறது' என்று கூறி, சந்தோஷப்படுவர். இது தவறான எண்ணம். கடந்த 1992ல், கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக நான் இருந்த போது, திருமணமாகி ஒரு குழந்தையுடன் பஞ்சம் பிழைக்க, சேலத்திலிருந்து வந்த 26 வயது பெண்ணுக்கு மாரடைப்பு வந்து, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார்.

'கூலி வேலை செய்யும் இளம் பெண்ணுக்கு மாரடைப்பா?' என்று வாயை பிளக்க வேண்டியதில்லை. மேற்சொன்ன காரணங்களால் வரலாம். சமீபத்தில் நான் சீனா சென்றிருந்தேன். அங்கு, தென் சீனா இன்டர்நேஷனல் போஸ்ட் என்ற பத்திரிகை வெளிவருகிறது. அதில், பெண்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை:

* 30 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், குடும்பத்தில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, இடுப்பு அளவு அதிகம் உள்ளவர்கள் ஆண்டுதோறும் டி.எம்.டி., எக்கோ, கெட்டக் கொழுப்பு, டி.ஜி.எல்., எச்.டி.எல்., பரிசோதனை செய்ய வேண்டும்.

* ரத்த அழுத்தம், சுகர் பரிசோதனைகள், 18 வயதில் ஆரம்பிக்க வேண்டும். பள்ளியிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

* பெண்கள் உடலிலுள்ள சுண்ணாம்பு சத்து அளவு, எலும்பில் அதன் அடர்த்தி ஆகியவற்றை, 45 வயதிற்கு மேல் கட்டாயம் பார்க்க வேண்டும்.

* ஈஸ்டிரோஜனின் அளவு கண்காணிக்க வேண்டும்.

என் அறிவுரைகள்...

இளவயது, 30 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மாரடைப்பை விட, மார்பக புற்று நோய் அதிகம் தாக்குகிறது.  கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க, ஆண்டுதோறும், அவற்றுக்குரிய பரிசோதனைகளை மேற்கொண்ட வண்ணம் இருப்பது இன்றியமையாதது.  இனிய சகோதரிகளே...  ஆரோக்கியமாக வாழ, ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து கொண்டு, வாழ்க வளமோடு!






      Dinamalar
      Follow us