தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜூலை 29, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1 ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என, ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

2 ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன.

3 ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.

4 ஹீமோகுளோபினின் பணி என்ன?

ஹீமோகுளோபின் தான், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது, ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவர்.

5 ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு, இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில், இரும்புச் சத்து அதிகம். அவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால், ரத்த சோகை வராது.

6 ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை, 'படை வீரர்கள்' என்று அழைக்கலாம். ஏனெனில், உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்து போராடுபவை, ரத்த வெள்ளை அணுக்களே. அவை, நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.



7 ரத்தத்தில் உள்ள, 'பிளேட்ெலட்' அணுக்களின் வேலை என்ன?


உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி, பிளேட்ெலட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, 'கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தக் கசி அவை தடுத்துவிடும்.



8 'பிளாஸ்மா' என்றால் என்ன?


ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் இருக்கும்.

9 ரத்த அழுத்தம் என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், 'பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே, ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும், ஒரு நிமிடத்திற்கு, 250 மி.லி., ரத்தம் தேவை.



10 உடலில் ரத்தம் பயணம் செய்யும் துாரம் எவ்வளவு?


ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் துாரம், ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ., ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

- செல்வராஜ், பொதுநல மருத்துவர். ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்தவங்கி ஓய்வு பெற்ற தலைமை மருத்துவர்,

சென்னை.

98410 67775

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us