sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/அழகான பாதங்கள் பெறுவது எப்படி?

அழகான பாதங்கள் பெறுவது எப்படி?

அழகான பாதங்கள் பெறுவது எப்படி?


PUBLISHED ON : ஜூன் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக பாதங்கள் அழகாக இருந்தாலே, அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருப்பர் என்ற எண்ணம் அனைவரிடமும் உண்டு. சிலருக்கு கடிமான செருப்பு அணிவதால், பாதவெடிப்பு ஏற்படும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையால், வெடிப்பு உண்டாகும். ஒரு சிலர் கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. இதனால் தொற்று ஏற்பட்டு காலில் வெடிப்புகள் ஏற்படும்.

கால் வெடிப்புகள் நீங்க, சில எளிமையான வழிகள் உள்ளன. வெடிப்புகள் உள்ள பகுதியில், வேப்பிலையில் மஞ்சளை சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். சொர, சொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும், சிறு வெடிப்புகள் நீங்கும்.

எலுமிச்சம்பழ சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் பொடி செய்து, பூசினால் கால்வெடிப்பு மறைந்து, கால் பளபளப்பாகும். இரவில் கால் பொறுக்கும் சூட்டில், வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கால்களை வைத்து லேசான ஸ்க்ரப்பர் கொண்டு

தேய்தால், வெடிப்பு மறையும். கால்களை பூட் க்ரீம் போட்டு, தேய்த்தாலும் வெடிப்புகள் அகலும்.

பாதங்கள் அழுக்காகாமல் பார்த்து கொண்டாலே, வெடிப்புகள் வராமல் தடுக்கலாம். கால் வெடிப்பு தொல்லை இருப்பவர்கள், வீட்டுக்குள் அணியும் காலணிகளை அணிந்து கொள்ளலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள், எலுமிச்சம் பழத்தோலை கால் பாதங்களில் தேய்க்க வேண்டும்.

இதனால் காலில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் மறைந்து கால்கள் பளபளப்பாகும். கடுகு எண்ணெயை தினமும், கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து வந்தால், சொர, சொரப்பு நீங்கி மிருதுவாகும். தண்ணீரில் தயிர் மற்றும் உப்பு போட்டு, அதை பிரஷால் தொட்டு பாதங்களை அழுத்தி கழுவினால், பாதம் மெத்தென்று ஆகும்.

வெந்தயக்கீரையை நன்கு அரைத்து கால், கைகளில் தேய்த்து விட்டு, 15 நிமிடம் கழித்து, கழுவினால் கால் பாதம் அழகாக மாறும். மருதாணி பவுடருடன்

டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து கொள்வது மிகவும் நல்லது. இது கால்

வெடிப்பை நீக்குவதோடு, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது. மருதாணி இலையுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, விழுதாக அரைத்து, கால் வெடிப்பில் பூசி வந்தால், பாதம் அழகாக மாறும்.

கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை, தினமும் இரண்டு முறை பூசி வந்தால், இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகி விடும். உருளைக்

கிழங்கை காய வைத்து, அதை மாவு போன்று அரைத்து பாதங்களில் பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் அழகாக மிளிரும்.

பப்பாளி பழத்தை பிழிந்து, எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து பாதங்களில் தடவி அரைமணி கலந்து கழுவினால் வெடிப்பு மறையும். வெங்காயத்தை வதக்கி, அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால், கால் வெடிப்பு மறையும். கால் வெடிப்பு, தோலில் உள்ள எண்ணெய் பசை குறைவதால் ஏற்படுகிறது. சோப்பு தண்ணீரில் நீண்ட நேரம் நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காலுறைகளை சுத்தமாக துவைத்து, அணிய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us