தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/"கையை தூக்கி எழுத முடியவில்லையே'

"கையை தூக்கி எழுத முடியவில்லையே'

"கையை தூக்கி எழுத முடியவில்லையே'


PUBLISHED ON : நவ 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனது வயது 62. இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். சிகிச்சையின்போது தொடை எலும்பின் தலைப்பகுதி மட்டும் எடுக்கப்பட்டு இருக்கிறது. காலின் நீளம் குறைபாடு மற்றும் இடுப்பு மூட்டின் அசைவு குறைவாக உள்ளது. இதற்கு மாற்று சிகிச்சை உள்ளதா?

இடுப்பு மூட்டின் தலைப்பகுதியை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையை, 'கர்ட்ல்ஸ்டோன் புரொசீஜர்' என்பர். பொதுவாக இச்சிகிச்சை குறிப்பிட்ட சில பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்குத்தான் என கருதப்படுகிறது. சிலநேரங்களில் கிருமிகள் இருந்தாலும் இச்சிகிச்சையை செய்வர். அடிப்படை காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். அடிப்படை பிரச்னைக்கு முதலில் சிகிச்சை அளித்து, அதன்பின் இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை செய்தால் நீங்கள் நன்றாக நடக்க முடியும். மூட்டினை அசைக்கவும் முடியும். 85 சதவீதத்திற்கு மேல் வெற்றி கிடைக்கும்.

52 வயதான எனக்கு ஆறுமாதங்களாக தோள்ப்பட்டை வலி உள்ளது. இருவாரங்களுக்கு முன் தோள்மூட்டு நுண்துளை சிகிச்சை செய்தேன். மீண்டும் பணிக்குச் சென்று வகுப்பில் கரும்பலகையில் எழுத துவங்கினால் வலி வருமா?

இதற்கு 'இம்பிங்மென்ட் சிண்ட்ரோம்' -க்காக செய்யப்படும் மூட்டு நுண்துளை சிகிச்சையில் தோள்மூட்டில் உள்ள நீர்ச்சுரப்பியில் புண் இருப்பதால் அது அகற்றப்படுகிறது. மேலும் இம்பிங்க்மென்ட் ஆகாமல் இருப்பதற்கு 'மினிமல் அக்ரோமியாபிளாஸ்டி' செய்யப்படுகிறது. இவ்வாறு முறையாக செய்தால், தோள் மூட்டின் வலி நீங்கும். ஆறு முதல் 10 வாரங்களுக்குள் கரும்பலகையில் எழுதுவது உட்பட அனைத்து வேலைகளையும் வலியின்றி செய்ய முடியும்.

72 வயதான நான், கடந்த 2 ஆண்டாக தோள்பட்டையை உயர்த்த முடியாமல் வலி உள்ளது. எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்ததில், தோள்மூட்டில் உள்ள சுற்றுப்பட்டை தசை கிழிந்து மூட்டு தேய்மானம் அடைந்து உள்ளது தெரிந்தது. அதற்கு 'ரிவர்ஸ் சோல்டர் ரீப்ளேஸ்மென்ட்' சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் கூறினார். இதனால் பலனுண்டா?

தோள் மூட்டின் சுற்றுப்பட்டை தசை கிழிந்து, மூட்டு தேய்மானம் அடைந்தால் அதை 'ரொட்டேட்டர் கப் ஆர்த்ரோபதி' என்பர். இதற்கு நவீன மருத்துவத்தில் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட சிகிச்சைதான் நீங்கள் கூறிய ரிவர்ஸ் சோல்டர் ரீப்ளேஸ்மென்ட் சிகிச்சை. இது தேய்மானம் அடைந்த மூட்டினை அகற்றி, பந்து கிண்ண மூட்டான தோள் மூட்டினில், ரிவர்ஸ் சோல்டர் மூட்டு பொருத்தப்படுகிறது. 'டெல்டாய்டு' எனப்படும் தசையின் இறுக்கத்தை சீரமைத்து இயங்கச் செய்வதால் மூட்டின் அசைவு நன்றாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள இச்சிகிச்சையின் வெற்றி விகிதம் 95 சதவீதத்திற்கும் கூடுதலாகும்.

- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,

மதுரை. 93442-46436

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us