தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பெற்றோர்களால் குழந்தைகளுக்கு தொற்று

பெற்றோர்களால் குழந்தைகளுக்கு தொற்று

பெற்றோர்களால் குழந்தைகளுக்கு தொற்று


PUBLISHED ON : ஜூன் 10, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெற்றோருக்கு கொரோனா தொற்று இருந்து, அவர்கள் வாயிலாக, குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அப்படி இருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு எந்தவித அறிகுறியும் வெளியில் தெரிவதில்லை. இது போன்று பாதித்த குழந்தைகளில், 80 சதவீதம் குழந்தைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பாவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மீதி உள்ளவர்களில், 15 சதவீதம் பேருக்கு லேசான காய்ச்சல், மூக்கில் நீர் வடிவது, மிதமான வறட்டு இருமல், தொண்டை வலி என்று லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு உள்ளது.

பரிசோதனை



இவர்கள் சாதாரணமாகவே இருப்பர். தீவிர தொற்று பாதிப்பு அறிகுறிகளாக காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு, அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள், வெறும், 5 சதவீதம் பேர் தான். இது, இத்தாலி, சீனா போன்ற பாதிப்பு தீவிரமாக உள்ள நாடுகளின் நிலைமை இது. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்தே, நாம் அந்த நிலைமை ஏற்படாமல் இருக்க, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறோம்.

சென்னை, மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில், லேசான அறிகுறிகள் இருந்தால், பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கி இருக்கிறது அரசு.

இதற்கு காரணம், உடனே மருந்து கொடுத்து குணப்படுத்துவது இல்லை; எந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் தானாகவே சரியாகி விடும்.

மலேரியா, காசநோய் தொற்றுக்கள் இருப்பது போன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கிடையாது. அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தர முடியும். அதனால், தொற்றை உறுதி செய்து, தனிமைப்படுத்தினால் பரவாது.

ஒரு குழந்தையிடம் இருந்து இன்னொரு குழந்தைக்கு தொற்று ஏற்பட்டால், பாதித்த குழந்தைக்கு இருப்பதை போன்றே, மிதமான அறிகுறிகளுடன் தான் இருக்கும்.

அதே நேரம், வீட்டில் இருக்கும் முதியவர்கள், வேறு உடல் பிரச்னை இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு தொற்றினால், பாதிப்பு தீவிரமாக இருக்கும். அதனால் தான், பாதித்த குழந்தைகளை தனிமைப்படுத்துவது அவசியம்.

பொதுவாக, குழந்தைகளுக்கு எந்த தொற்று ஏற்பட்டாலும், தீவிரமாகவே தாக்கும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று, மிதமான அறிகுறிகளுடன் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.

ஆனால், குழந்தைகளுக்கு இயல்பாகவே அடிக்கடி சளி பிடிப்பதால், ஒவ்வொரு வைரஸ் தொற்றின் போதும், எதிர்ப்பணுக்கள் உருவாகி விடும்.

இது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது உட்பட, சில காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆலோசனை



பரிசோதனை முடிவுகள் ஒரு முறை எதிர்மறையாக கொரோனா பாதிப்பு இல்லை என்று வந்தால், உடனடியாக இல்லை என்று முடிவு செய்து விடக் கூடாது. பல நேரங்களில், பல முறை பரிசோதனை செய்ய வேண்டியதும் இருக்கும். நோயாளிகளை நேரடியாக பார்த்து, ஆலோசனை வழங்குவதில் உள்ள திருப்தி, 'டெலி மெடிசன்' ஆலோசனையில் கிடைப்பது இல்லை. இருந்தாலும், நிலைமைக்கு தகுந்தவாறு நடந்து கொள்வதே, அனைவருக்கும் பாதுகாப்பானது.

தீவிர அறிகுறிகள் இருந்தால் மட்டும், நேரடியாக மருத்துவ ஆலோசனை பெறலாம்.

டாக்டர் கே.தனலட்சுமி,

குழந்தைகள் நல மருத்துவர்,

சென்னை.

044 4234 4949

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us