PUBLISHED ON : ஜூன் 08, 2020

நாடு முழுதும் கொரோனா பீதியில் இருக்கும் இந்த நேரத்தில், உணவு குழாயும் சுவாச குழாயும் முழு வளர்ச்சி அடையாமல், குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை காப்பாற்ற வேண்டிய சவால், எங்கள் முன் இருந்தது.
திருச்சியை சேர்ந்த திலகவதி, வீரமணி தம்பதிக்கு, திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து, கடந்த சில வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
அவசர சிகிச்சை
குழந்தையின்மைக் கான பல சிகிச்சைகள் தொடர்ந்து தோல்வியில் முடிய, ஐ. வி. எப்., எனப்படும் செயற்கை கருவுறுதல் சிகிச்சையை பல முறை முயற்சி செய்ததில், திலகவதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
திருச்சியில் உள்ள மருத்துவமனையில் 32 வாரத்தில், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல் எடை, 1 கிலோ, 100 கிராம் இருந்தது. பிறந்ததும் சுவாசிப்பதில் குழந்தைக்கு சிரமம் இருப்பதும் தெரிந்தது.
இதற்கு காரம், 4 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரும், அரிதான பிறவி கோளாறு. இதற்கு டிரிக்கியா ஈ சோ பே க ல் பீஸ்டு லா - டி ஈ எப் என்று பெயர். இந்த பிரசனையில் உணவு குழாய் முழுமையாக வளர்ச்சி அடையாமல் பாதியிலேயே நின்று, மீதி இருப்பது சுவாச குழாய் இணைந்து, சுவாசிப்பதற்க்கும் உணவு செல்வதற்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.
குழந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறது; உடல் எடை மிகவும் குறைவாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்வது இயலாது என்று அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை க்கு கொண்டு செல்ல ஆலோசனை தெரிவித்ததால், எங்களை அணுகினர்.
திருச்சியிலிருந்து சென்னை சாலை மார்க்கமாக, ஆறு மணி நேரம் பயணம் செய்து குழந்தையை கொண்டு வருவதே. சவாலாக இருந்தது. இங்கு வந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்தோம்.
அறுவை சிகிச்சையின் போது தான், குழந்தையின் உணவு குழாய், சுவாச குழாய் இரண்டும் வளர்ச்சி அடையாமல் பாதியில் நின்றது ஒரு பக்கம் என்றால், அதன் வடிவமும் சாதாரணமாக இருப்பதை போல இல்லை.
டாக்டர்கள் எஸ்.நமசிவாயம், எஸ். ரமேஷ் உதவியுடன், தொடர்ந்து நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, இரண்டையும் சரி செய்தோம். ஏற்கனவே இருந்த கோளாறால் நுரையீரல் வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது. குறைந்தது இரண்டு மாதங்கள் செயற்கை சுவாச குழாய் பொறுத்த வேண்டிய நிலையில், இதற்கான முயற்சி இரண்டு முறை தோல்வியில்.முடிந்தது.
இரண்டு மூக்கு துவாரங்களையும் இணைத்தே, சுவாச குழாய் இல்லாமல் செயற்கை சுவாச கருவி பொறுத்த, முடியும்.
ஒரு மூக்கு துவாரத்தில் திரவ உணவு செலுத்த வசதியாக குழாய் பொருத்தி இருந்தது. அதை நீக்கினால், அறுவை சிகிச்சை செய்துள்ள உணவு குழாயில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், மிக சவாலான் காரியம் செய்ய வேண்டியிருந்தது.
மூக்கில் இருந்த உணவு குழாயை வாய் வழியே எடுத்த பின், சுவாச கருவியை பொருத்தினோம். குழந்தை சிரமம் இல்லாமல் சுவாசித்தது.
மூளை பாதிப்பு
உணவு குழாயில் இதை போன்று பிரச்னை இருந்து, சரி செய்த பின்னும், கொடுக்கும் திரவ உணவு, பல சமயங்களில், இரைப்பைக்கு சென்று மீண்டும், உணவு குழாயில் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆனால் இந்த குழந்தையை பொறுத்தவரை, இது போன்ற எந்த பிரச்னையும் இல்லை. அதனால் உடல் எடை சீராக அதிகரிக்கிறது.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் கண் அல்லது மூளை பாதிப்பு இவளுக்கு இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறாள். செயற்கை சுவாச கருவி இல்லாமல் இயல்பாக சுவாசிக்கிறாள்.
எங்களுக்கு தெரிந்து, சிக்கலான அறுவை சிகிச்சை மற்றும் குறை பிரசவ, பிறவி கோளாறுகள் இல்லாத மிக சிறிய வயது குழந்தை இவள் தான்.
டாக்டர் என்.சந்திர குமார்,
பச்சிளம் குழந்தைகள் பிரிவு, சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, சென்னை
dr.chandrakumar@kkcth.org
044 42001800
உள் இணைப்பு எண்: 244
