தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தும்மினால் தொற்றுமா 'கொரோனா'

தும்மினால் தொற்றுமா 'கொரோனா'

தும்மினால் தொற்றுமா 'கொரோனா'


PUBLISHED ON : ஜன 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவை தாக்கியுள்ள 'கொரோனா' வைரஸ் அண்டை நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. இந்தியாவில் விமான நிலையங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

'கொரோனா வைரஸ்' குடும்பத்தில் இருந்து, உருவாகியுள்ள வைரஸ்தான் 'என்.சி.ஓ.வி.,-2019'. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொகுப்பில் இது ஏழாவது வைரஸ்.

ஏற்கெனவே சீனாவில் 2002ல் கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து 'சார்ஸ்' வைரஸ் தாக்கியதில் 800 பேர் பலியாகினர். 2012ல் மத்திய கிழக்கு நாடுகளில் 'மெர்ஸ்' வைரஸ் தாக்கியது.

பரவும் விதம்

* 'மெர்ஸ்' வைரஸ் பாதிக்கப்பட்ட ஒட்டகத்தில் இருந்தும், 'சார்ஸ்' வைரஸ், பாதிக்கப்பட்ட புணுகு பூனையிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது.

* சீனாவின் உகான் நகரில் கடல் உணவு விற்பனை சந்தையில், 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது.

அறிகுறி

* தொடர் காய்ச்சல்

* தலைவலி

* தொண்டை வலி

* மூக்கு ஒழுகுதல், இருமல்

* மூச்சுத் திணறல்

* வயிற்றுப் போக்கு

* கிட்னி செயலிழப்பு, இறுதியில் மரணம்



சிகிச்சை
: தடுப்பு மருந்து தற்போது இல்லை

பரிந்துரை: நன்றாக கை கழுவுதல், இருமல், தும்மல் வரும் போது வாய், மூக்கை துணியால் மூடுதல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us