தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/"அப்பளம், வடகம் உண்பது நல்லதா?'

"அப்பளம், வடகம் உண்பது நல்லதா?'

"அப்பளம், வடகம் உண்பது நல்லதா?'


PUBLISHED ON : பிப் 12, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து ஒன்றரை ஆண்டாகிறது. சர்க்கரை நோய் மாத்திரையாக Mஞுtஞூணிணூட்டிண (இஞுtச்ணீடிண) 500 மி.கி., எடுத்து வருகிறேன். இதைத் தொடர்ந்து எடுக்கலாமா? வீராச்சாமி, திருமங்கலம்

சர்க்கரை நோய் உள்ள இதய நோயாளிக்கு, மாத்திரைகளிலேயே மிகச்சிறந்த மாத்திரை என்றால் அது 'மெட்பார்மின்'தான். இது இதயத்திற்கு பல வழிகளிலும் நன்மை செய்கிறது. இதுதவிர உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இந்த மாத்திரையை தொடர்ந்து எடுப்பதால் எந்த பாதிப்பும் வராது. இம்மாத்திரையால் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் தான், வேறு சர்க்கரை மாத்திரையை எடுக்க வேண்டியது வரும். சர்க்கரை நோய் உள்ள இதய நோயாளிகள், தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 130 மி.கி., என்றும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 180 மி.கி.,க்குள்ளும் இருந்தால் போதுமானது. ஏஞஅ1இ அளவு 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும்.


எனக்கு ரத்த அழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. எதற்கு டாக்டர், அட்டூணிஞீணிணீடிணஞு 5 மி.கி., என்ற மாத்திரை தந்தார்? இதைத் தொடரலாமா? ரமேஷ், போடிநாயக்கனூர்

பொதுவாக ஒருவரது நார்மலான ரத்த அழுத்தம் 120/80 என்பதாகும். இதில் மேலிருக்கும் எண்ணை, குதூண்tச்டூடிஞி என்றும், கீழிருக்கும் எண்ணை ஈடிச்ண்tணிடூடிஞி என்றும் குறிப்பிடுவர். அட்டூணிஞீணிணீடிணஞு என்பது ரத்த அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகும். இது ரத்தக் கொதிப்பை குறைப்பதுடன், பக்கவிளைவு இன்றியும் இருக்கிறது. மிக மிகச் சிலருக்கே இதனால் கால் வீக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இதைத் தொடர்ந்து எடுப்பது நல்லது தான்.


கச்ஞிஞு Mச்டுஞுணூ என்பது என்ன? இது எதற்காக பொருத்தப்படுகிறது? இந்திரஜித், மேலவளவு

இதயத்தில் மின்னோட்டம் மேலிருந்து கீழாக செல்கிறது. இம்மின்னோட்டத்தில் தடைஏதும் ஏற்பட்டால் அதை ஹார்ட் பிளாக் என்பர். இப்படிப்பட்ட ஹார்ட் பிளாக் உள்ளவருக்கு பொருத்தப்படும் சிறிய கருவி பேஸ்மேக்கர். நம் வீடுகளில் மின்தடை ஏற்படும்போது ஜெனரேட்டர் பயன்படுத்துவது போல, இதயத்தில் மின்தடை ஏற்படும்போது பயன்படுத்தப்படும் கருவிதான், 'இன்வெர்ட்டர் ஜெனரேட்டர்' போன்ற கருவிதான் பேஸ்மேக்கர். இது இரண்டு பாகங்களாக உள்ளது. ஒன்று பேட்டரி; மற்றொன்று ஒயர். பேட்டரியை கதடூண்ஞு எஞுணஞுணூச்tணிணூ என்றும், ஒயரை 'ஃஞுச்ஞீ' என்றும் கூறுவர். இந்த பேட்டரியை கழுத்து எலும்புக்கு கீழ் ஒரு சிறிய பாக்கெட் செய்து வைப்பர். 'லீட்'ஐ அங்கிருந்து இதயத்துக்குள் கொண்டு செலுத்தப்படும். இதன் விலை 40 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அதன் சிறப்பை பொருத்து விற்பனையாகிறது. தற்போது பேஸ்மேக்கர் கருவி, 'ஹார்ட் பெயிலியருக்கும் பொருத்தப்படுகிறது.

எனக்கு 46 வயதாகிறது. ரத்தக் கொதிப்பு உள்ளது. உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன். ஆனால் சாப்பாட்டில் எனக்கு அப்பளம், வடகம் அவசியம் தேவை. இது தவறா? ஆர். சிதம்பரம், ராஜபாளையம்

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் உணவில் உப்பு மற்றும் எண்ணெயை நன்கு குறைப்பது அவசியம். இத்துடன் மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, தினமும் நடை பயிற்சி செய்வதும் முக்கியம். அப்பளத்தை பொறுத்தவரை அதில் உப்பு அதிகம். மேலும் அது எண்ணெயில் பொரிக்கப்படுகிறது. எனவே தினமும் அதை உண்பது தவறு. ஏனெனில் அவை இரண்டும், ரத்தக்கொதிப்பு மற்றும் இதயத்திற்கு நேர் எதிரி. எனவே, உடனடியாக நீங்கள் அப்பளம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தி, அதற்கு பதிலாக நிறைய காய்கறி, பழங்களை உண்பதே சரியானது.

டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us