தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பூசி உண்டா

புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பூசி உண்டா

புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பூசி உண்டா


PUBLISHED ON : பிப் 24, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

* உலகப்புற்று நோய் தினம் என்றால் என்ன அதை ஏன் கொண்டாட வேண்டும்?

ஆண்டு தோறும் உலகப்புற்று நோய் தினம் பிப்., 4ல் கொண்டாடப்படுகிறது. 2008 பிப்., 4ல் ஜெனிவா நகரில் உலகப்புற்று நோய் பிரகடனம் செய்யப்பட்டது. அதில் புற்று நோய்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு செய்ய வேண்டிய உதவிகள், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் தடுப்பு முறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. அதனால் தான் பிப்., 4 உலகப் புற்றுநோய் தினமாக கொண்டாடப்படுகிறது.

* மது, புகைப்பழக்கம் உள்ளோருக்கு புற்று நோய் வருமா?

மது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட புற்றுநோய் அதிகமாக வரும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அப்பழக்கம் இல்லாதவர்களுக்கு மரபணு சார்ந்த புற்றுநோய்கள் வரக்கூடும்.

* சிறுவர், குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருமா?

புற்று நோய் என்பது கருவில் வளரும் சிசு உட்பட முதியோர் வரை அனைவருக்கும் வரக்கூடும். ஆனால், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வரும் புற்று நோயை நவீன சிகிச்சை முறைகளின் மூலம் பூரணமாக குணப்படுத்தி விடலாம்.

* எந்த புற்று நோய்களை தடுப்பூசி பூலம் வராமல் தடுத்திட முடியும்?

கருப்பை வாய் புற்று நோய் மற்றும் கல்லீரல் புற்று நோய் ஆகிய இரண்டையும் தடுப்பூசி மூலம் வராமல் தடுத்திடலாம். ஆனால், கருப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசியை முதல் உடலுறவுக்கு முன்னால் போட்டு கொள்ள வேண்டும். கல்லீரல் புற்று நோய்க்கான தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று முறை குறிப்பிட்ட கால தவணையில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பருவ வயது ஆண், பெண்ணுக்கு எவ்விதமான புற்றுநோய் வரும்?

பருவ வயது ஆண், பெண்ணுக்கு சினை முட்டை, ஆண் விரை போன்ற புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் முறையான சிகிச்சை மூலம் பூரணமாக குணப்படுத்த முடியும். மேலும் அவர்கள் குணமடைந்து மற்றவர்களை போல் திருமணம் செய்து கொள்ளலாம். குழந்தை பாக்கியம் பெறலாம்.

* புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்தால் பரவும் வாய்ப்புள்ளதா?

இதுகுறித்து பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. புற்று நோய் குணமாவதற்கு மிக முக்கியமான சிகிச்சைகளில் ஒன்றுதான் அறுவை சிகிச்சை. முறையான அறுவை சிகிச்சையின் மூலம் பெரும்பாலான புற்று நோய்களை குணப்படுத்த முடியும்.

* புற்று நோய் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகுமா?

புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்க வேண்டியிருப்பதால் மற்ற நோய்களை விட இதற்கு சிறிது அதிகம் செலவாகும்.

- டாக்டர் மோகன் பிரசாத்

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,

மதுரை

98430 50822

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us