தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஒரே ஒரு பீட்சாவும் கல்லீரலுக்கு செய்யும் தீங்கு தான்!

ஒரே ஒரு பீட்சாவும் கல்லீரலுக்கு செய்யும் தீங்கு தான்!

ஒரே ஒரு பீட்சாவும் கல்லீரலுக்கு செய்யும் தீங்கு தான்!


PUBLISHED ON : பிப் 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துரித உணவுகள் சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டால், மது அருந்தாததால் ஏற்படும், 'நான் ஆல்கஹாலிக் பேட்டி லிவர்' எனப்படும், கல்லீரல் கொழுப்பு படியும் பிரச்னை வருவதை தவிர்க்க முடியாது. முடிவில் இது, 'சிரோசிஸ்' எனப்படும் திசுக்களை அழித்து, கல்லீரல் செயலிழப்பை அல்லது கேன்சரை ஏற்படுத்தலாம்.

துரித உணவுகள் சாப்பிடுவது, சர்க்கரை கோளாறையும், இதய ரத்த நாளங்களில் பிரச்னையையும் ஏற்படுத்தும் என்பது தெரிந்த ஒன்று தான்.

பீட்சா உட்பட துரித உணவுகளை சாப்பிடும், 4,000 இளம் வயதினரின் கல்லீரல் கொழுப்பை பரிசோதித்தனர். இவர்களில், 52 சதவீதத்தினர் ஏதாவது ஒரு துரித உணவை சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள்.

இவர்களில், 29 சதவீதத்தினர், தினசரி சாப்பிடும் கலோரியில், ஐந்தில் ஒரு பகுதியை துரித உணவின் வாயிலாகவே பெறுகின்றனர். இதில், 29 சதவீதத்தினரின் கல்லீரலில் கொழுப்பு அதிகப்படியாக படிந்திருப்பது தெரிந்தது.

உடல் பருமன், சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், தங்களின் தினசரி கலோரியில், 20 சதவீதத்திற்கும் அதிகமாக துரித உணவு சாப்பிடுவதன் வாயிலாகவே பெறுகின்றனர்.

மிகக் குறைந்த அளவு துரித உணவு அல்லது முற்றிலும் இதை தவிர்ப்பவர்களை ஒப்பிடும் போது, இவர்களின் கல்லீரல் கொழுப்பு அதிகப்படியாகவே உள்ளது.

உடல் பருமன், சர்க்கரை கோளாறு இல்லாதவர்களும், தினசரி கலோரியில் ஐந்தில் ஒரு பங்கு துரித உணவு சாப்பிட்டாலும், இவர்களின் கல்லீரல் கொழுப்பு மிதமான அளவில் ஏறுகிறது.

'ஒரு நாளைக்கு ஒரு முறை உணவகத்தில் சென்று துரித உணவு சாப்பிடுகிறேன். இது எந்த விதத்திலும் என் கல்லீரலை பாதிக்காது...' என்று தவறாக நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி...

ஒரு வேளை என்றாலும், ஒரு நாளைக்கு தேவையான கலோரியில், ஐந்தில் ஒரு பங்கு துரித உணவாக இருந்தால், அது கல்லீரலுக்கு அபாயகரமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

- 'கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி அண்டு ஹெபடாலஜி' இதழ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us