தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - கொழுப்பாக மாறும் சர்க்கரை

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - கொழுப்பாக மாறும் சர்க்கரை

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - கொழுப்பாக மாறும் சர்க்கரை


PUBLISHED ON : பிப் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்ப்ப காலத்தில், இந்திய மரபுவழிப் பெண்களுக்கு, நீரிழிவுக் கோளாறும், உயர் ரத்த அழுத்தமும் பொதுவாக வரும் பிரச்னைகள். காரணம், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள, நம் பாரம்பரிய உணவு மற்றும் மரபியல் காரணங்கள்.

கர்ப்பம் தரித்த உடன், சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால், சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதற்கு ஏற்ற, உணவு அட்டவணையைப் பின்பற்றச் சொல்வோம். சீரான உடற்பயிற்சி செய்து, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் முக்கியம். கர்ப்ப காலத்தில், சர்க்கரை பிரச்னை வரக்கூடிய வாய்ப்பு இயல்பாகவே அதிகம். காரணம், சாதாரண நாட்களில், சர்க்கரையை சக்தியாக மாற்றும் இன்சுலின் ஹார்மோனின் திறன், கர்ப்ப காலத்தில் குறைவாக இருக்கும்.

அம்மாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்தால், கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு இருக்கும்.

அம்மா உடம்பில் இருக்கும் சர்க்கரை, ரத்தத்தின் வழியே குழந்தைக்கும் செல்லும்; குழந்தையின் உடல் சர்க்கரையை எதுவும் செய்ய முடியாது; கொழுப்பாக மாற்றி விடும். இதனால், குழந்தையின் எடை, 3.5 கிலோவிற்கு மேல் அதிகரித்து, பருமனான குழந்தையாக பிறக்க வாய்ப்பு அதிகம்.

உடல் பருமனுடன் பிறக்கும் குழந்தை, வாழ்க்கை முழுவதும் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

டாக்டர் வித்யா மூர்த்தி

மகப்பேறு சிறப்பு மருத்துவர்

மொபைல்: 97898 22552


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us