தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - கிராமிற்கு ஒன்பது கலோரிகள்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - கிராமிற்கு ஒன்பது கலோரிகள்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - கிராமிற்கு ஒன்பது கலோரிகள்!


PUBLISHED ON : ஏப் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆலிவ், கடுகு, நிலக்கடலை, எள், அரிசித் தவிடு, மக்காச்சோளம் ஆகியவற்றில் இருந்து எடுக்கும், சமையல் எண்ணெய் ஆரோக்கியமானது. இவற்றில், கரையக் கூடிய கொழுப்பு உள்ளது. இது, உடம்புக்கு நல்லது.

ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாமல், சுழற்சி முறையில், ஒவ்வொரு மாதமும், ஒரு எண்ணெய் உபயோகிக்கலாம்.

உடல் பருமன் இருப்பவர்கள், சாப்பிடும் உணவில், எவ்வளவு கலோரி உள்ளது என, தெரிந்து சாப்பிட வேண்டும்.

ஒரு கிராம் கொழுப்பில், ஒன்பது கலோரிகள் உள்ளன. இதே அளவு, கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தில் நான்கு கலோரிகள் உள்ளன.

பாதாம், முந்திரி, வால்நட் போன்ற உலர் கொட்டைகள், பூமிக்கு அடியில் விளையும் கேரட், பீட்ரூட் சாப்பிடலாம். கிழங்கு வகைகளில், மாவுச்சத்து அதிகம் இருப்பதால், தவிர்ப்பதே நல்லது.

உணவில் உள்ள குளூகோஸ் அளவை அடிப்படையாகக் கொண்டு, கிளைசெமிக் அளவை கணக்கிட வேண்டும். 55 சதவீதத்திற்கு குறைவாக கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகளான, காய்கறிகள் சாப்பிடுவதே நல்லது. 70 சதவீதத்திற்கு அதிகமாக கிளைசெமிக் குறியீடு இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

டாக்டர் என்.சுதர்சன், பொது நல மருத்துவர், சென்னை. மொபைல்: 98948 41948

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us