PUBLISHED ON : ஏப் 07, 2019

சரும நோய்கள் என்பவை வெளிக்காயங்கள் அல்ல. உடலின் உட்புறத்திலோ அல்லது உயிராற்றலிலோ ஏற்பட்டுள்ள ஒரு பாதிப்பு தான். இதுதான் வெளிப்புறத்தில் தோன்றுகிறது. ஆகவே தோல் பிரச்னைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.
அதை விடுத்து வெளிப்புறத்தே தோன்றிய நோய்கள் என மதிப்பிட்டு, அவற்றை குணமாக்க மேற்பூச்சு மருந்துகள் மற்றும் களிம்புகள் உபயோகிப்பது மிகுந்த கேடுகளை விளைவிக்கக்கூடும். அக்கி, படை, சிரங்கு போன்ற திடீர் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, நோயாளியின் உடலில் உள்ளும், புறமும் தென்படும் நோய் குறிகளுக்கு ஏற்ற ஒத்த ஹோமியோ மருந்தை தேர்ந்தெடுத்து பூரண தீர்வு பெறலாம். பல்வேறு தோல் பிரச்னைகளுக்கு ஹோமியோபதியில் சிறந்த சிகிச்சை உண்டு.
* கடுக்காய்க்கு அதிக மகத்துவம் இருப்பதாக சொல்லப்படுகிறதே. உண்மையிலேயே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை அதற்கு உள்ளதா?
நமது உடலை வலிமை பெற செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுக்காய் உங்கள் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். கடுக்காய் பொடி மலச் சிக்கலை போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் துாண்டும்.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வயிற்று மற்றும் குடல் புண்களை ஆற்றவும், வாய் துர்நாற்றம் போக்கவும் பெரிதும் உதவுகிறது. தினமும் இரவு துாங்க செல்வதற்கு முன் 1 ஸ்பூன் கடுக்காய் பொடி ஒரு தம்ளர் வெந்நீருடன் சேர்த்து குடித்துவர சர்வ நோய்களும் நிவாரணமாகும்.
- டாக்டர் மதுமிதா
ஓமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை.
89392 66767.
