தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வீட்டு சாப்பாடு தான் பெஸ்ட்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வீட்டு சாப்பாடு தான் பெஸ்ட்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வீட்டு சாப்பாடு தான் பெஸ்ட்!


PUBLISHED ON : செப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜிம்'மில் வியர்வை சிந்தினாலும், உடல் எடை குறைய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா...

அப்படியென்றால், நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட் தான் காரணம்.

உடல் பருமனுக்கு பிரதான காரணம், முறையான உடல் பயிற்சி செய்யாதது அல்ல; ஊட்டச் சத்தில்லாத, நம் உடலுக்கு தேவையில்லாத அதிக கலோரி உள்ள உணவுகள். உதாரணமாக, பாட்டிலில் அடைக்கப்பட்ட, 200 மி.லி.,

காற்றூட்டப்பட்ட குளிர் பானத்தில், 150 கலோரி உள்ளது. இதை தினமும் குடித்தால், 'டைப் - 2' நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு, 11 மடங்கு அதிகம்.

வீட்டில் அரைத்த மாவில் செய்த இட்லி; வீட்டிலேயே உறைய வைத்த தயிர்; புடலங்காய், பீர்க்கங்காய் உட்பட நாட்டு காய்கள்; கொய்யா, மாதுளை என, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள்; ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்றால், வீட்டிலேயே செய்த பாயசம்; ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள ஓமம், வேப்பிலை; சமையலுக்கு செக்கில் ஆட்டிய எண்ணெய் என, ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு பாருங்கள். ஜிம்மிற்கு போகாமலேயே உடல் எடை சீராக குறைய ஆரம்பிக்கும்.

டாக்டர் தாரிணி கிருஷ்ணன்,

வெல்னஸ் கிளினிக், சென்னை.

dhar.krish@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us