குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: இளகிய டால்டா பிரியாணி!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: இளகிய டால்டா பிரியாணி!
PUBLISHED ON : ஆக 26, 2018

அ நிறம் | அளவு
பிரியாணி உட்பட, சில ஸ்பெஷல் உணவுகளை தயாரிக்கும் போது, நெய் பயன்படுத்துவதா, டால்டாவா என்ற யோசனையும், கூடவே வந்து விடும்.
சாதாரண எண்ணெயை, சில வேதி பொருட்களைச் சேர்த்து, வேதி மாற்றத்திற்கு உட்படுத்தி, நெய் போன்ற கெட்டியான தன்மைக்கு கொண்டு வருவதே, டால்டா.
இதில் முழுக்கவே, 'டிரான்ஸ் பேட்' எனப்படும், செயற்கை கொழுப்பு உள்ளது; இது, நம் உடம்பில் உள்ள நல்ல கொழுப்பை குறைப்பதோடு, கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும். அதனால், டால்டாவை தவிர்ப்பதே நல்லது.
தவிர்க்க முடியாத போது, கெட்டியாக இருக்கும் டால்டாவை தவிர்த்து, இளகிய நிலையில் உள்ளதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், செயற்கை கொழுப்பு கொஞ்சம் குறைவு.
ஏஞ்சலா ஸ்டெப்பி, ஹோம் மேக்கர். டெக்சாஸ், அமெரிக்கா.
