குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: விழிப்புணர்விற்கும், யதார்த்தத்திற்கும் ரொம்ப தூரம்!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: விழிப்புணர்விற்கும், யதார்த்தத்திற்கும் ரொம்ப தூரம்!
PUBLISHED ON : ஜன 20, 2019

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், விபத்து ஏற்படும் என்பது தெரியும். ஆனால், முறையாக பின்பற்றுகிறோமா... அதைப் போன்றே உடல் பருமனையும், எதனால், இந்தப் பிரச்னை வரும், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பது தெரியும். ஆனாலும், நம்மில் பெரும்பாலானோர், அந்த வழிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.
ஒரு விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வு, யதார்த்தமாவதற்கு காலம் ஆகலாம்.
எந்த உடல் பிரச்னையும், நம் குடும்பத்தில் ஒருவருக்கு வந்து, அவர் சிரமப்படுவதை பார்த்த பிறகே, 'ஐயோ, நாமும் கவனமாக இருக்க வேண்டும்' என்று நினைப்போம். மனித மனம் அப்படி.
உடல் பருமனுக்கான சிகிச்சை என்பது, முதலில் வாழ்க்கை முறை மாற்றம், அதன் பின் மருந்துகள், அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை.
உடல் பருமன், ஒரு முறை வந்து சரியாகி விட்டாலும், வாழ்க்கை முழுவதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
டாக்டர் ராஜ்குமார் பழனியப்பன்
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் சென்னை.
