தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - எடையை குறைக்க உதவும், 'தாண்டவ்!'

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - எடையை குறைக்க உதவும், 'தாண்டவ்!'

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - எடையை குறைக்க உதவும், 'தாண்டவ்!'


PUBLISHED ON : நவ 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில், 24 சதவீதத்திற்கும் அதிகமாக ஆண்களும், 45 சதவீதம் பெண்களும், போதுமான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதாக, உலக சுகாதார மையத்தின் அறிக்கை எச்சரித்து உள்ளது. உடற்பயிற்சி இல்லாவிட்டால், கொழுப்பு அதிகரித்து, உடல் பருமன் கூடும். விளைவு, சர்க்கரை கோளாறு, ரத்த அழுத்தம் அதிகரிப்பது உட்பட, பல பிரச்னைகள் வரும்.

உடல் எடையைக் குறைப்பது ஒன்றும், ராக்கெட் விடும் அளவிற்கு, சிக்கலான அறிவியல் சூத்திரம் இல்லை. நாம் சாப்பிடும் உணவில், கொழுப்பை குறைத்து, தினமும் முறையாக உடற்பயிற்சி செய்தாலே, உயரத்திற்கு ஏற்ப, உடல் எடையுடன் இருக்கலாம்.

எங்களுடைய நீரிழிவு மையத்தில், 'தாண்டவ்' என்ற பெயரில், பெண்களுக்கென பிரத்யேக உடற்பயிற்சிகளை, நடனத்தின் மூலம் கற்றுத் தருகிறோம். டிராக் சூட், பேன்ட் போட்டு, 'ஜிம்'மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது, தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதை, பெண்கள் சிரமமாக நினைக்கின்றனர்; ஆனால், நடனம் என்று சொன்னால், யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்கின்றனர்.

ஒரு குழுவாக சேர்ந்து நடனம் ஆடச் சொன்னால், அதை ஒரு போட்டியாக நினைத்து, ஆர்வமாக செய்கின்றனர். இத்துடன், உடல் எடையை குறைக்க, தேவையான, 'டயட்' உட்பட, ஆலோசனைகளையும் வழங்குகிறோம்.

டாக்டர் ஆர்.எம். அஞ்சனா,

நீரிழிவு கோளாறு மருத்துவ ஆலோசகர், சென்னை.

99624 28888, 89391 10000

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us