sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"குறைவாக புகைத்தால் பாதிப்பு வராதா'

/

"குறைவாக புகைத்தால் பாதிப்பு வராதா'

"குறைவாக புகைத்தால் பாதிப்பு வராதா'

"குறைவாக புகைத்தால் பாதிப்பு வராதா'


PUBLISHED ON : மார் 17, 2013

Google News

PUBLISHED ON : மார் 17, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிகரெட் பிடிக்கும் நண்பனிடம் அறிவுரை கூறினால், குறைவான எண்ணிக்கையில் புகைபிடிப்பதாக கூறுகிறான். சிகரெட்டில் உள்ள நச்சுத் தன்மை குறித்து கூறமுடியுமா?

சிகரெட்டின் நச்சுத் தன்மையால் புகைப்பவர் மட்டுமின்றி, அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன்மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைட், நைட்ரஜன் அமைட், அரோட்டிக், ஹைட்ரோ கார்பன், நிக்கோடின், பார்மால் டிஹேட் உள்பட 700க்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்கள் நம் உடலுக்குள் சென்று நுரையீரல், இருதயம், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல உறுப்புகளை சேதமாக்குகிறது. புகைப்பவரை மட்டுமின்றி, அருகில் உள்ளவர்களின் சுவாசம் வழியாக அவரது உடலுக்குள்ளும் சென்றடைகிறது. ரத்த அழுத்தம், சி.ஓ.பி.டி., புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாக வழிசெய்கிறது. சிகரெட் புகைப்பது ஒன்றிரண்டுதான் என்றாலும், இந்த நச்சுக்கள் நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். நண்பரிடம் அப் பழக்கத்தை உடனே நிறுத்தும்படி கூறுங்கள்.



எனக்கு இரு மாதங்களாக இருமல் உள்ளது. ஒரு வாரமாக இருமலுடன் ரத்தமும் சேர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?


ஒருவர் இருமும்போது ரத்தம் வர பல காரணங்கள் உண்டு. நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்ட பலருக்கு இருமலுடன் ரத்தம் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. மூச்சுக்குழாய் பெரிதாகவும், வீக்கத்துடனும் இருந்தால் ரத்தம் வர வாய்ப்பு உண்டு. நுரையீரலில் புற்றுநோய், பல்மோனரி எம்பாலிசம், கனக்டிவ் டிஸ்யூ டிஸ்ஆர்டர் போன்ற நுரையீரல் நோய்கள் இருந்தாலும் ரத்தம் வர வாய்ப்புள்ளது. ரத்தம் வருவதற்கான காரணத்தை நுரையீரல் பரி சோதனைகள் மூலம் கண்டறிந்து, உடனடியாக சிகிச்சையை ஆரம்பிப்பது அவசியம். ரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால் பாதிப்பும் சிறியதாக இருக்கும். மருத்துவ சிகிச்சையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ரத்தத்தின் அளவு அதிகம் இருந்தால் எந்த ரத்தக் குழாயில் இருந்து கசிவு ஏற்படுகிறது என கண்டறிந்து, அந்த ரத்தக்குழாயை அடைப்பது நல்லது. இதனை பிரான்சியல் ஆர்டரி எம்பாலிசேஷன் என்பர்.

அதனால் உடனடியாக ரத்தத்தின் காரணத்தை கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகிச்சையை துவக்குவது மிக நல்லது.

மீனவனான நான் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் போது, ஆழ்கடலில் இறங்க வேண்டியுள்ளது. கடல் நீருக்குள் மூழ்குவதால், நுரையீரலில் ஏதேனும் பிரச்னை வருமா?



கடலுக்குள் உள்ள அழுத்தம் நம் நுரையீரலின் காற்றழுத்தத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த காற்றழுத்த வேறுபாட்டால், நுரையீரலின் ரத்தக்குழாய்க்குள் காற்று புகுந்து விடுகிறது. இதனால் வரும் பிரச்னைகளை, 'பல்மோனரி பரோடிரோமா' மற்றும்

'டீகம்பேரிசஷன் சிக்னஸ்' என்பர். மிகஆழமான கடலுக்குள் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. சாதாரண நீச்சல் குளத்தில் ஆழமாக செல்வதால் ஒரு பிரச்னையும் ஏற்படுவதி இல்லை.

- டாக்டர் எம். பழனியப்பன்,

மதுரை. 94425-24147






      Dinamalar
      Follow us