sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"டான்சிலால் பற்களுக்கு பாதிப்பு வருமா'

/

"டான்சிலால் பற்களுக்கு பாதிப்பு வருமா'

"டான்சிலால் பற்களுக்கு பாதிப்பு வருமா'

"டான்சிலால் பற்களுக்கு பாதிப்பு வருமா'


PUBLISHED ON : மார் 17, 2013

Google News

PUBLISHED ON : மார் 17, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு ஆண்டுக்கு முன் எனக்கு பல் எடுக்கப்பட்டது. கழற்றி மாட்டும் பல் செட் போட விருப்பம் இல்லை. டென்டல் இம்ப்ளான்ட் மூலம் பற்கள் கட்டலாமா? இச்சிகிச்சை முறை பற்றி கூறுங்களேன்?

கழற்றி மாட்டும் பல்செட்டுகள் முதலில் நன்றாக இருந்தாலும், அவை தாடை எலும்புகள் தேய்வதை தவிர்ப்பதில்லை. பல் இல்லாத இடங்களில் எலும்பு தேய்ந்து, நாளடைவில் பல்செட்கள் போடுவதும் கடினமாகிவிடும். அதோடு நிலையான பல் கட்டும் வேறு சிகிச்சை முறைகளும் செய்ய முடியாமல் போய்விடும். இதை தவிர்ப்பதற்கு டென்டல் இம்ப்ளான்ட் முறையே சிறந்த வழி. இதன்மூலம் இயற்கையான பற்களைப் போல பெறலாம். இது டைட்டானியம் எனும் உலோகத்தால் ஆனது. இதனை பல்லின் வேர் இருந்த இடத்தில் வைத்துவிட்டு, அதன்மீது பற்களை பொருத்திவிடலாம். பல் எடுத்தவுடன் அதே இடத்தில் இம்ப்ளான்டுகளை உடனடியாக வைக்கலாம். சில நேரங்களில் பற்களின் சொத்தை காரணமாக, சீழ் இருந்தால், பல்லை எடுத்துவிட்டு, ஒருமாத காலம் பொறுத்து, இம்ப்ளான்ட் வைக்க வேண்டும். பல் எடுத்து ஒரு ஆண்டுக்குள் இம்ப்ளான்ட் வைப்பது நல்லது. இம்முறையில் பல்கட்டும்போது, அருகில் இருக்கும் பற்களை கரைத்து அதனுடன் சேர்த்து பல்கட்டத் தேவையில்லை. பல்கட்டுவதற்காக சொத்தை இல்லாத பற்களை கரைப்பது தவறு. இம்ப்ளான்ட் மூலம் பொருத்தப்படும் பற்கள், நீண்ட காலம் எவ்வித பிரச்னையும் இன்றி இருக்கும், என பல மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இன்றைய நவீன சிகிச்சை முறைகளில், இம்ப்ளான்ட்டுகள் மூலம் பல்கட்டுவது அனைவருக்கும் உகந்த சிகிச்சை முறையே.

எனது மகனுக்கு டான்சில்ஸில் வீக்கம் உள்ளது. இத்தொந்தரவால் பற்களில் என்ன பாதிப்பு ஏற்படும்?

டான்சில் என்பது தொண்டைப் பகுதியில் இருக்கும் ஒரு சுரப்பி. இதன் வேலைகளுள் ஒன்று, சுவாசிக்கும் காற்றின் மூலம் உடம்பில் கிருமிகள் புகாமல் தடுப்பது. பொதுவாக சிறுகுழந்தைகளுக்கு டான்சில்களில் பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற கிருமிகளால் வலியும் வீக்கமும் உண்டாகும். இதனால் சிலசமயம் எச்சில் விழுங்குவதுகூட கடினமாகிவிடும். வாய் மற்றும் தொண்டை சார்ந்த பகுதியில் இருப்பதால், பற்களுக்கு நேரடியாக இல்லா விட்டாலும், கண்டிப்பாக சில பாதிப்புகளை

உண்டாக்கும். டான்சில் பிரச்னை இருக்கும் சிறுவர்கள் சுவாசிக்க சிரமப்படுவர். இதனால் மூக்கினால் சுவாசிப்பது மாறி, வாயினால் சுவாசிக்க துவங்கி விடுவர். வாயினால் சுவாசிக்கும்போது, வாயும், ஈறுகளும் உலர்ந்து போகும். வாய் உலர்ந்து போனால், பல்சொத்தை மற்றும் ஈறுநோய்கள் வருவது சுலபமாகிவிடும். அதேபோல வாயினால் சுவாசிக்கும் குழந்தைகளின் தாடை வளர்ச்சி சரியாக இருக்காது. பற்களின் சீர்வரிசையும் மாறிவிடும். முன்பற்கள் தொற்று பற்களாக வளரும். முன்பற்களில் ஓப்பன் டைப் எனப்படும் இடைவெளி உருவாகும். இதுபோன்ற பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதே சிறந்த வழி. டான்சில் தொந்தரவு இருந்தால், உரிய நேரத்தில் சரிசெய்வது உடல், பற்களுக்கு நல்லது.

- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,

மதுரை. 94441-54551






      Dinamalar
      Follow us