sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"ரெட் ஒயின்' இருதயத்திற்கு நல்லதா'

/

"ரெட் ஒயின்' இருதயத்திற்கு நல்லதா'

"ரெட் ஒயின்' இருதயத்திற்கு நல்லதா'

"ரெட் ஒயின்' இருதயத்திற்கு நல்லதா'


PUBLISHED ON : மார் 17, 2013

Google News

PUBLISHED ON : மார் 17, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரெட் ஒயின்' அருந்தினால் இருதயத்திற்கு நல்லது என்கிறார்களே, உண்மையா?

எஸ்.வசந்தகுமார், மதுரை

ரெட் ஒயின் அருந்துவதால் இருதயத்திற்கு பலனளிப்பதாக பல ஆண்டுகளுக்கு முன், கண்டு பிடித்துள்ளனர். 1950 - 60களில் அமெரிக்கர்களைவிட, பிரெஞ்சு நாட்டவர்கள் அதிக இறைச்சி மற்றும் வெண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டனர். இருந்தபோதிலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும்தன்மை, அமெரிக்கர்களைவிட, மிகவும் குறைவாக இருந்தது. இதை, 'FRENCH PARADOX' என்பர். இதற்கு காரணம் தினமும், அவர்கள் அருந்தும் ரெட் ஒயின் என தெரிந்தது.

ரெட் ஒயின் அருந்தும்போது, இருதயத்தின் ரத்தநாளங்களின் உட்சுவர்கள், ஆரோக்கியமாகவும், அதனுள் ரத்தக்கட்டிகள் ஏற்படாமலும், அதனால் மாரடைப்பு ஏற்படாமலும் இருக்கிறது. ரெட் ஒயினில், 'பாலிபீ னால்ஸ்', 'ரெஸ்வெரேட்ரால்' போன்ற ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால், பல்வேறு வழிகளில் ரத்தநாளங்களுக்கு நன்மை அளிக்கிறது. ஆல்கஹால் இல்லாத ரெட் ஒயின் அருந்தினால் அது, ரத்தஅழுத்தத்தை நன்கு குறைப்பது தெரிந்துள்ளது. தினமும் ஆல்கஹால் இல்லாத ரெட் ஒயின் அருந்தினால் இருதயத்திற்கு நல்லது.

எனது வயது 52. இதுவரை எனக்கு ரத்தகொதிப்போ, சர்க்கரை நோயோ இல்லை. பணியிடம், வீட்டில் மனஅழுத்தம் அதிகமாக உள்ளது. இதனால் எனது உடல் ஆரோக்கியம் பாதிக்குமா?

பி.ஆசைத்தம்பி, வேடசந்தூர்

நவீன உலகில் மிகமுக்கியமான நோய் காரணியாக மனஅழுத்தம் உள்ளது. இதனால் தூக்கம் இன்றி, ரத்தஅழுத்தம் கூடி, சர்க்கரை நோய் ஏற்பட்டு, ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு போன்ற கொடூர நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்றைய சூழலில் மனஅழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. மனஅழுத்தம் உடலை பாதிக்காது இருக்க, நல்ல உணவுப் பழக்கம், காய்கறிகள், பழங்கள் அதிகம் உண்பது, யோகா தியான பயிற்சிகள், மனதை எப்போதும் தளர்வாக வைத்திருக்கும் பயிற்சிகளை செய்து, எவ்வளவுக்கு எவ்வளவு டென்ஷன் இன்றி பார்த்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு உடல் உள்ளுறுப்பு களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. நேரடியாக இருதயத்தின் ரத்தநாளங்கள் சுருங்கவும்,

மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.



இரண்டு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்புக்கு, ரேமிபிரில், டெல்மிசார்ட்டான் மாத்திரைகளை தொடர்ந்து எடுக்கிறேன். ஒரு மாதமாக அவ்வப்போது தலைச்சுற்றல் வருகிறது. மாத்திரைகளை தொடர்ந்து எடுக்கலாமா?


சி.சந்திரநாதன், விருதுநகர்.

ரேமிபிரில் என்பது அ.இ.உ.ஐ., மருந்து வகையை சேர்ந்தது. டெல்மிசார்ட்டான் என்பது அ.கீ.ஆ., மருந்து வகையைச் சேர்ந்தது. இரண்டும் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து, பலவழிகளில் இருதயத்தின் ரத்தநாளங்களுக்கு பலனளிக்கிறது. தற்போதைய நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, இந்த 2 மாத்திரைகளையும் சேர்த்து எடுப்பது சரியானதல்ல. உங்கள் டாக்டரை அணுகி, கலந்தாலோசித்து விட்டு, இரண்டில் ஒன்றை நிறுத்துவது சரியானது. தலைச் சுற்றல் காரணத்தை பரிசோதனை மூலம் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெறுவது முக்கியம்.

வீட்டுச் சமையலில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை உபயோகிப்பது சரியானதா? ? எம்.சுந்தரராஜன், தேவகோட்டை

இது மிக தவறான பழக்கம். உடல் ஆரோக்கியத்துக்கு, எவ்வளவுக்கு எவ்வளவு எண்ணெயை குறைக்கின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. மிகமுக்கியமாக ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது மிக தவறு. இதனால், Trans Fat கொழுப்பினால் ரத்தநாளங்களில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் தன்மை பல மடங்கு உயர்த்தப்படுகிறது. பொரித்த உணவை அறவே தவிர்ப்பது, அவித்த, வேகவைத்த காய்கறி, பழங்கள் நிறைந்த உணவை அதிகம் எடுப்பது சரியானதாகும்.

டாக்டர் சி.விவேக்போஸ்,

மதுரை. 0452- 233 7344






      Dinamalar
      Follow us