sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மலச்சிக்கல் தீர மணலிக்கீரை

மலச்சிக்கல் தீர மணலிக்கீரை

மலச்சிக்கல் தீர மணலிக்கீரை


PUBLISHED ON : அக் 25, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் ஆரோக்கியத்தை விரும்பும், பெரும்பாலானவர்களின் முக்கிய உணவாக இன்று மாறியிருக்கிறது கீரை.

பல்வேறு நோய்களை தீர்ப்பதில், கீரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நோய்களை குணமாக்கும் சிலவகை மருந்துகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும்போது, பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

ஆனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத, இயற்கை மருத்துவமாக கீரை விளங்குகிறது. கீரைகளில் பலவகை உண்டு. இதில் மணலிக்கீரையின் மகத்துவம் பெரிது. மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்து மே மருத்துவக்குணம் வாய்ந்தது.

மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து, கூட்டு தயார் செய்து, சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை குணமாகும்.

ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதிக்கு முக்கிய காரணம், பித்த அதிகரிப்பு. மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும், இப்பிரச்னை

ஏற்படுகிறது. இப்பிரச்னை தீர மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய: மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில், 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால், குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்பு சளி, வயிற்றுப்புண் குணமாகும்.

மூளை நரம்புகள் பலம்பெற: மணலிக்கீரை வதக்கி சாப்பிட்டால், மூளை நரம்புகள் பலப்படும்.

ஈரல் பலம் பெற:மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us