தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மாசில்லா காற்றை தரும் மரங்கள்!

மாசில்லா காற்றை தரும் மரங்கள்!

மாசில்லா காற்றை தரும் மரங்கள்!


PUBLISHED ON : அக் 17, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுத்தமான காற்றை சுவாசித்தால் தான், ஆரோக்கியமாக வாழ முடியும். பரிணாம வளர்ச்சிக்கு பின், நம்முடைய சுற்றுச்சூழல் மாசு அடைந்து, சமச்சீரற்ற தன்மையாகி விட்டது. பசுமையான மரங்கள், சுற்றுச்சூழலில் இருக்கும் மாசுக்களை வடிகட்டி, காற்றை துாய்மையாக்கும். நவீன வளர்ச்சியில் தொழிற்சாலைகள், வாகனங்கள் அதிகமாகி, காற்று மொத்தமும் மாசடைந்து உள்ளது.

வெளிச்சூழலில் இருக்கும் மாசு, சுவாசத்தின் வாயிலாக, நுரையீரலில் தான் முதலில் சென்று சேரும். நுரையீரலில் மாசு சேர சேர தழும்பு போன்று சேர்ந்து விடும். சுவாசத்தில் இருந்து ஆக்சிஜனும், கார்பன் - டை - ஆக்சைடும், காற்றுப் பைகளில் சேர்ந்து, பிரிந்து, சுத்தமான ஆக்சிஜன் ரத்தத்தில் சேர்ந்து, உடல் முழுதும் செல்களுக்கு செல்லும்; இதனால் நுரையீரல் பலவீனமாகி, பல கோளாறுகள் ஏற்படுகின்றன.

இயற்கையை அழிக்க அழிக்க செயற்கையான பல பிரச்னைகள் உண்டாகும். குறைந்தபட்சம் நம்மை சுற்றி இருக்கும் இடத்தில் மரங்களை வைத்து, இயற்கையோடு ஒன்றி வாழப் பழகினால், பல பிரச்னைகளை எளிதாக தவிர்க்கலாம்.

டாக்டர் சி.ஆறுமுகம்,

இதய, நுரையீரல் மாற்று

அறுவை சிகிச்சை மருத்துவர்,

சென்னை. 044 - 6666 7777

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us