தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மிதமான சூடு... நுரையீரலுக்கு இதம்!

மிதமான சூடு... நுரையீரலுக்கு இதம்!

மிதமான சூடு... நுரையீரலுக்கு இதம்!


PUBLISHED ON : மே 20, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்தா, ஆயுர்வேதா இரண்டு மருந்துகளுக்கு பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டும் மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் தான். ஆயுர்வேதம், சமஸ்கிருத மருத்துவ ரீதியிலும், சித்த தமிழ் மருத்துவத்தையும் அடிப்படையாக கொண்டது. வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு, நவீன மருத்துவத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும் தடுப்பு மருந்துகள் உள்ளன.

டெங்கு, பறவை காய்ச்சல் உட்பட வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் மருத்துவ ரீதியாக அங்கீகரித்த தரமான சித்த மருந்து. ஆயுர்வேதத்தில் அகஸ்திய ரசாயனம், அம்ருதாரிஷ்டம், சுதர்சன மாத்திரை போன்றவை தடுப்பு மருந்தாக மட்டுமல்லாது, வைரஸ் அறிகுறிகளை குறைக்கவும், நோயின் தன்மை தீவிரமாவதை தடுக்கவும் உதவுகிறது.

கடந்தாண்டு வைரஸ் தொற்று ஏற்பட்ட போது, கபசுர குடிநீர் சர்வதேச அளவில் பயன்பட்டது. நம் நாட்டில் எந்த அளவிற்கு இது பயன்பட்டதோ, அதை விடவும் அதிகமாக பல வெளி நாடுகள், நம் நாட்டில் இருந்து இதை இறக்குமதி செய்து பயன்படுத்தின.

ஆயுஷ் அமைச்சகம், ஆயுஷ் குவாத சூரணம் என்ற மருந்தை தயாரித்து வழங்கியது. ஆயுஷ் குடிநீர் சூரணம் என்று சித்த மருத்திலும், ஆயுஷ் ஜோஷெண்டா என்று யுனானி மருத்துவத்திலும், ஒரே மூலப் பொருட்களை கொண்டு வெவ்வேறு பெயர்களில் தயாரித்துக் கொடுத்தது.

கடந்த ஆண்டு தொற்று பாதிப்பின் போது, அரசு மருத்துவமனைகளில் கபசுர குடிநீரும் தரப்பட்டது. அலோபதி சிகிச்சையின் போது, ஆயுர்வேத, சித்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம்; எந்த பக்க விளைவுகளும் வராது. அதே சமயத்தில், இரண்டு மருந்துகள் செயல்படும் விதமும் வேறானது.

அதனால், இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடாமல், ஒரு மணி நேர இடைவெளியில் சாப்பிடுவது நல்லது. 'டோலோ 650' சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, கபசுர குடிநீர் குடிக்கலாம்.

தடுப்பு மருந்துகள்

பொதுவான, அடிப்படை சித்த மருந்து என்பது கபசுர குடிநீர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, சுதர்சனம் மாத்திரை உள்ளது. இதிலேயே, மகா சுதர்சன் என்ற வகையில், ஜின்கொனா என்ற மூலப் பொருள் சேர்ந்து உள்ளது. இதை சாப்பிடும் போது, இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

பாசிட்டிவ் என்றால், தடுப்பு மருந்துகளோடு சேர்த்து, என்ன மாதிரியான அறிகுறிகள் உள்ளதோ, அதற்கு ஏற்ப மருந்து சாப்பிட வேண்டும். அம்ருத்திருஷ்டம் என்ற திரவ மருந்து, காய்ச்சலை குறைக்கும். அகஸ்திய ரசாயனம், நுரையீரல் பிரச்னைகளை சரி செய்து, நுரையீரலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

தசமூல கடுத்ராயம் என்ற சுக்கு, மிளகு சேர்ந்த மருந்து சாப்பிடலாம்; இது தொண்டை, தொற்றை சரி செய்யும். இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது. அளவுக்கு அதிகமாக எடுத்தால், வாயு தொல்லை, வாயில் புண், உடல் சூடு போன்ற சிறிய பக்க விளைவுகள் வரலாம்.

உடல் உள் செயல்பாடு கோளாறு, இதய நோய், சர்க்கரை நோய் உட்பட, நீண்ட உடல் கோளாறு உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு

குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து, நுரையீரலுக்கு இதமான, சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். பாலில், மஞ்சள், மிளகு போட்டு குடிக்கலாம். இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி தருவது தேன்.

சுத்தமான தேன் கிடைத்தால், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

சீரகம், கருங்காலி, பதிமுகம் சேர்த்து நீரை காய்ச்சி குடிக்கலாம். ஒவ்வொரு நோய்க்கும், மருந்துக்கும் ஏற்ப பத்திய உணவுகளை பின்பற்றுவது நல்லது.

டாக்டர் யாமினி ரவி

தலைமை ஆயுர்வேத மருத்துவர்,

கோட்டக்கல் ஆர்யா வைத்திய சாலா, சென்னை.

avsknanganallur@Gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us