sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சூரணத்தை புகைத்து படரவிடும் அபூர்வ சிகிச்சை!

/

சூரணத்தை புகைத்து படரவிடும் அபூர்வ சிகிச்சை!

சூரணத்தை புகைத்து படரவிடும் அபூர்வ சிகிச்சை!

சூரணத்தை புகைத்து படரவிடும் அபூர்வ சிகிச்சை!


PUBLISHED ON : செப் 01, 2024

Google News

PUBLISHED ON : செப் 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பைல்ஸ்' எனப்படும் மூலம் மலப்பாதையில் உள்ள நரம்பு கட்டமைப்பு, இயல்பான நிலையில் மலத்தை கட்டுப்படுத்த உதவும். ஆசனவாயில் உள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, அதனுள்ளே இருக்கும் ரத்த நாளத்தின் சுவர் மெல்லியதாகி, மலம் கழிக்கும்போது ரத்த நாளங்கள் கிழிந்து ரத்தம் வெளியேறுவதை பைல்ஸ் என்கிறோம்.



காரணங்கள்


வாத, பித்த, கப தோஷங்களுக்கு ஏற்படும் சீற்றத்தால் 'ஜாடராக்னீ' எனப்படும் பசித் தீயின் பலம் குறைகிறது. சரியான உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றாமல் இருப்பது, கோடைக் காலத்தில் உடலை சூடாக்கும் உணவுகளை சாப்பிடுவது, பசிக்கும் போது சாப்பிடாமல் அதிக நேரம் வயிற்றை காயப்போடுவது, கடினமான இடங்களில் பலமணி நேரம் உட்காருதல், சிரமப்பட்டு மலம் கழிப்பது, சிறுநீர், மலத்தை அடக்குவது, மிகவும் குளிர்ந்த நீரால் ஆசனவாயை கழுவுதல் போன்ற அடி வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கும் பல காரணிகள் மூல நோய்க்கு காரணங்கள்.

வறட்சி, மலத்தை கட்டும் தன்மையுள்ள பயறு, வரகு, சோளம், கடலை போன்ற தானியங்களை சாப்பிடும் போது, வாயு அதிகமாகி, கீழ் நோக்கிய மலப்பையை அடைத்து, வாயு, மலம், சிறுநீர் வெளியேற்றத்தை தடை செய்வதால், மலப்பை தன் இடத்தை விட்டு வெளியே வந்துவிடும்.

ஆயுர்வேத மருந்துகள்

சிருபில்வா, புனர்ணவா, சித்ராக், கடுக்காய், உலர்ந்த இஞ்சி, நீண்ட மிளகு போன்ற மருந்துகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கஷாயத்துடன், புனர்ணவா, தசமூலா, த்ரனபஞ்சமூலா, ஹபுஷா போன்ற பல மருந்துகளின் சேர்க்கையால் தயாரிக்கப்படும் நெய் மருந்தை ஒரு ஸ்பூன் எடுத்து, காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வர, ரத்த மூலத்தை கட்டுப்படுத்தி, வலியை குறைத்து மலம் எளிதாக வெளியேற உதவும்.

குக்குலு, திப்பிலி, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், பட்டை, ஏலக்காய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூரணத்தை புகைத்து, புகையை மூலத்தின் மீது படரவிடும் அபூர்வ சிகிச்சை முறையாலும் மூலம் சுருங்கக் கூடும். இதே சூரணத்தை தேன் குழைத்தும் சாப்பிடலாம்.

சாங்கோர்யாதி கிருதம், மூஷிக தைலம் போன்ற விசேஷ மருந்துகள் மலப்பை இறக்கத்திற்கு சிறந்த மருந்தாகும். அவற்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

விஷமுஷ்டி இலைகள், லஜ்ஜாலு, பலாண்டு, அதிமதுரம், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜெல் தடவுவது, ஒவ்வாமை, தொற்றை தடுக்க உதவும்.

ஆயுர்வேதத்தில் 'சுஷ்ருத ஸம்ஹிதா' எனும் நுாலில், நான்காம் நிலை மூல நோய்க்கு, க் ஷார கர்மா எனப்படும் சிகிச்சையில், க் ஷார சூத்திரம் என்ற முறையை 7 - 10 நாட்கள், ஆயுர்வேத மருத்துவமனைகளில் தினசரி செய்வோம். அறுவை சிகிச்சையை தவிர்க்க இது உதவுகிறது.

உணவு முறைகள்

அசைவ உணவுகளை தற்காலிகமாக தவிர்க்கலாம். மைதா, துரித உணவுகளை நிரந்தரமாக தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த நல்ல பாக்டீரியாவை வளர்க்க உதவும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள், வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா போன்றவை சிறந்தவை. காலையிலும், இரவிலும் உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன், மோர் பருக வேண்டும். இந்துப்பு கலந்த மோர் கஞ்சி 30 நாட்கள் சாப்பிடுவதால் மூல உபத்திரவம் குறையும்.

மூலிகை தைலம் கலந்த வெதுவெதுப்பான நீரில், 20 நிமிடங்கள் அமர்வதால், மூலத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும்.

டாக்டர் எஸ்.ரஞ்சனி, ஆயுர்வேத பொதுநல மருத்துவர், சென்னை 94456 95771 drranjanisairam2910@gmail.com






      Dinamalar
      Follow us