sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : அக் 06, 2024

Google News

PUBLISHED ON : அக் 06, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிமேகலை, மதுரை: வெள்ளெழுத்து என்றால் என்ன. எதனால் ஏற்படுகிறது.

வயதாகும் போது அருகிலுள்ள பொருளை அவ்வளவாக பார்க்க முடியாதது, எழுத்துக்களை வாசிக்க முடியாத நிலையை வெள்ளெழுத்து என்கிறோம். இந்த பிரச்னை உள்ளவர்கள் சற்று தள்ளி வைத்து படிப்பதை பார்க்கலாம். வயதாகும் போது கண் நரம்புகளில் ஏற்படும் தளர்ச்சி, கண்ணின் நெகிழ்வுத்தன்மை குறைவது போன்றவை இதற்கு காரணம். கண்ணை அடிக்கடி இமைப்பது, துாரத்திலும் அருகிலும் அடிக்கடி பார்ப்பது போன்ற கண்பயிற்சிகள் மூலம் சரிசெய்யலாம். கண்ணில் ஈரத்தன்மை இருப்பது அவசியம்.

வீட்டில் தயாரித்த சுத்தமான நெய், ஆமணக்கு எண்ணெய்யை கண்ணின் வெளியே தேய்க்கலாம். திரிபலா மருந்து சாப்பிடலாம். முருங்கை இலையை காயவைத்து கல்உப்பு சேர்த்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவது நல்லது.

-- டாக்டர் நாராயணன் நம்பூதிரி ஆயுர்வேத கண் மருத்துவர்கூத்தாட்டுக்குளம், கேரளா



துர்காராம், பழநி:குழந்தைகளின் பால் பற்களை பராமரிப்பது எப்படி.

ஆறு மாதம் முதல் குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்க துவங்கும். ஆறு வயதுக்கு மேல் அவை விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும். பால் பற்களை தினமும் சுத்தமான ஈரத்துணியில் துடைக்க வேண்டும். பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிக சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும். வாயில் இருந்து வெளியே துப்ப தெரிந்த பிறகு குழந்தைகளுக்கு பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். இதன் பசையை பட்டாணி அளவில் எடுத்து பயன்படுத்த வேண்டும். ஆறு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ப்ளூரைடு நிறைந்த பற்பசைகளை பயன்படுத்த வேண்டும்.

-டாக்டர் காயத்ரிபல் மருத்துவர், பழநி

தேவரஞ்சன், கம்பம்: எனக்கு 48 வயதாகிறது. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அவ்வப்போது அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது காரணம் என்ன.

அடி வயிற்றில் வலி இருந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு போன்ற காரணங்களால் கல் ஏற்பட்டு அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீர் பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்து, ஸ்கேன் பார்க்க வேண்டும். சிறுநீரில் கல் இருந்தால் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

சிறுநீர் பாதையில் புற்று நோயாக இருந்தால் நோயின் தன்மைக்கு ஏற்ப எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் கீமோ தெரபி மூலம் குணப்படுத்தலாம். பொதுவாக சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் சிறுநீரக கல்லை அகற்றாவிடில் பின்னாளில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

--டாக்டர் ஆர்.செல்லப் பாண்டியன், சிறுநீரகவியல் சிறப்பு நிபுணர், கம்பம்

ச.சக்தி, சிவகங்கை: நெஞ்சு எரிச்சலை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

பொதுவாக நெஞ்சு எரிச்சல் வயிற்றில் சுரக்கும் அமிலம் மூலம் ஏற்படுகிறது. வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும்போது அஜீரணப் பிரச்னையே நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. மசாலா உணவுகளை அடிக்கடி உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக காரம், புளிப்பு, டீ, காபி போன்றவற்றை ஒரே நாளில் பல முறை எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும். புகை பழக்கம், மது பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நெஞ்சு எரிச்சல் பிரச்னை உள்ளது. அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனை பெறவேண்டும்.

- டாக்டர் எம்.நாச்சியப்பன், பொது அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

சிவகுமார், ராஜபாளையம்: எனது 12 வயது மகன் பள்ளியில் பாடங்களை கவனிக்காமல் புத்தகங்களை கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான். அதற்கு அறிவுரை கூறுங்கள்

இதுபோன்ற குழந்தையிடம் பெற்றோரும் ஆசிரியரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதில் மூளை வளர்ச்சி திறன் குறை, டிஸ்லொகேஷியா எனும் கற்றல் குறைபாடு, ஏ.டி.எச்.டி எனும் கவனக்குறைவு அதிக சேட்டை எனும் பிரச்னை உள்ளதா என பார்க்க வேண்டும். இதிலும் மிதமான, தீவிரமான, அதிதீவிரமான நிலைகள் உண்டு. பெற்றோராக உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்கும் முன் உள்ள பிரச்சனையை கண்டறிய வேண்டும். இயலாத நிலையில் அருகில் உள்ள மனநல ஆலோசகரிடம் மாணவரின் நிலை குறித்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு மருத்துவ ஆலோசனை அல்லது மருந்துகளுடன் கூடிய சிகிச்சை வழங்கி மாணவரின் எதிர்காலத்தை சரி செய்யலாம்.

- -டாக்டர் அர்ஜுனன்மனநல ஆலோசகர், சேத்துார்






      Dinamalar
      Follow us