sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : மே 11, 2025

Google News

PUBLISHED ON : மே 11, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவி, மதுரை: வலிப்பு நோய் தடுப்பதற்கான மருந்துகளை மகப்பேறு காலத்தில் உட்கொள்ளலாமா?

மகப்பேறு காலத்தில் எந்த மருந்தையும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு வலிப்புநோய் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக டாக்டரால் கண்டறியப்பட்டால் நிச்சயம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மருந்து எடுக்காமல் இருந்து வலிப்பு பெரிய அளவில் வந்தால் கருவில் வளரும் சிசுவுக்கு செல்லும் ஆக்சிஜன், ரத்தம் குறையும். அதனால் கருவின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எல்லா மருந்துகளையும் பேறு காலத்தில் கொடுக்க முடியாது. எதை கொடுக்கலாம், எதை எடுக்கக்கூடாது என்பதை டாக்டர் ஆலோசனைபடிதான் முடிவு செய்ய வேண்டும்.

-டாக்டர் எஸ். மீனாட்சிசுந்தரம், மூளை நரம்பியல் சிறப்பு நிபுணர், மதுரை.

கே. ஜானகி, திண்டுக்கல்: என் மகள் தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இவருக்கு கர்ப்ப கால மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் என்ன?

கர்ப்பத்திற்கு முன்பு பிடித்தவை மீது கர்ப்பகாலத்தின் போது நாட்டம் இல்லாமல் இருத்தல், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுதல் ஆகியவை கர்ப்பகால மன அழுத்தத்திற்கான அறிகுறிகள். இதை தவிர்க்க முதலில் 8 மணி நேரம் நன்றாக துாங்க வேண்டும். கணவன் உற்ற உறுதுணையாக மனைவிக்கு இருக்க வேண்டும். மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை பதட்டம், படபடப்பு, மனக்குழப்பத்தை பெரிதும் குறைக்கும். கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் எண்ணங்கள், உணர்வுகளை கணவன், பெற்றோர், தோழிகளுடன் பரிமாறுதல் வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்து கொண்டு முடிந்தவரை இனிப்புகள், அதிக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். சில குறிப்பிட்ட யோகாவை கர்ப்பகாலத்தில் செய்து வந்தால் மன அழுத்தத்தை முடிந்தவரை தவிர்க்க முடியும்.

- டாக்டர் சா. டீன் வெஸ்லி, மனநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திண்டுக்கல்

எம்.மச்சேந்திரன், ராமநாதபுரம்: இருசக்கர வாகன விபத்தில் தலையில் பாதிப்பு ஏதும் இல்லை. தற்போது தலைச்சுற்று, வாந்தி இருக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

விபத்துக்கள் ஏற்படும் போது தலையில் காயம் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். விபத்து நடந்த போது நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அசட்டையாக இருந்து விடக்கூடாது. தலையில் விபத்தின் போது ஏற்பட்ட பாதிப்பு ஒவ்வொன்றாக தெரியவரும். அப்போது டாக்டர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதனை விடுத்து சுயமாக முடிவு செய்து தாங்களே பரிசோதனைகளை செய்து சிகிச்சை பெறக்கூடாது. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வாந்தி, மயக்கம், தலைச் சுற்று, காதில் ரத்தம் வடிதல் போன்ற உபாதைகள் ஏற்படலாம். அப்படி இருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கபாலத்திற்குள் ரத்த கசிவோ, எலும்பு முறிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது நரம்பு தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

- டாக்டர் ஜே.பெரியார் லெனின், மன நல மருத்துவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

ம.ராதிகா, சிவகங்கை: பல் சொத்தையை எவ்வாறு சரி செய்வது?

பல் சொத்தை என்பது பல்லில் ஏற்படும் ஒரு சிறிய துளையாகும். நாளடைவில் இது பெரியதாகவும் ஆழமாகவும் மாறும். இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணம். சாக்லேட், இனிப்பு பலகாரங்கள், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். இவற்றை சாப்பிடும் போது துகள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.

வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு அமிலத்தைச் சுரக்கச் செய்துவிடும். இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அழிக்கத் தொடங்கும். இதன் அடுத்தக்கட்ட நிலையாகப் பற்கள் சொத்தையாகி விடும். பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால். அது அதிகமாகி மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளைடைவில் இது ஆழமாகி பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பல்லை பழைய நிலைக்கு கொண்டுவர பல் சொத்தை நீக்கி பல் அடைத்தல் அல்லது வேர் சிகிச்சை செய்ய வேண்டும். கடுமையான சிதைவு இருக்கும் நிகழ்வுகளில் பல் மருத்துவர் பல்லை அகற்றிவிடக்கூடும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் இந்த பல் சொத்தையை கட்டுப்படுத்தலாம்.

டாக்டர் ஜெ.விஜயபாரத், அரசு மருத்துவமனை, காளையார்கோவில்

ரா.தசரதன், ராமசாமியாபுரம்: எனது மகனுக்கு அம்மை நோய் வந்துள்ளது. விரைவில் குணமாக என்ன செய்ய வேண்டும்.

இது ஒரு வைரஸ் நோய். ஒருவருக்கு ஒரு முறை தான் வரும். ஒரு சிலருக்கு மட்டுமே 2வது முறையாக வரும். மற்றபடி பயப்படக்கூடிய நோய் அல்ல. எதிர்ப்பு சக்தி இருந்தால் அதுவே சரியாகிவிடும். பொதுவாக இந்நோய் வந்தால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் ஆகாரங்கள், புரோட்டின் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் 2 முறை குளிக்க வேண்டும். நோய் வந்தவர்களுக்கு உடம்பில் புண்ணாகும் பட்சத்தில் சலம் வைக்கக் கூடும். மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும்.

- டாக்டர் காராளமூர்த்தி, பொதுநல மருத்துவர், காரியாபட்டி






      Dinamalar
      Follow us