sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

விளையாட்டு வினையாகலாம்!

/

விளையாட்டு வினையாகலாம்!

விளையாட்டு வினையாகலாம்!

விளையாட்டு வினையாகலாம்!


PUBLISHED ON : ஜன 07, 2020

Google News

PUBLISHED ON : ஜன 07, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபத்தில், 12 வயது பையனை என்னிடம் அழைத்து வந்தனர், அவனது பெற்றோர். பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு முன்பிருந்தே, கடந்த ஒரு மாதமாக, அவன் பள்ளிக்குச் செல்லவில்லை. தலை வலிக்கிறது, கால் வலி, கை வலி, அயர்ச்சி என்று தினமும் ஏதாவது சொல்கிறான். உண்மையில், இந்த அறிகுறிகள் இருப்பதாகவே அவன் பெற்றோர் கூறினர்.

தேவையான எல்லா மருத்துவப் பரிசோதனைகளையும் செய்து பார்த்ததில், எந்தப் பிரச்னையும் இல்லை. பல கோணங்களிலும் ஆலோசனை செய்து பார்த்த பின், அவனது தினசரி நடவடிக்கைகளை அலச ஆரம்பித்தோம்.

ஒரு நாளில், ஐந்து - ஆறு மணி நேரம், இணையதளத்தில், பல விதமான விளையாட்டுகளை விளையாடுகிறான்; இதற்கென இருக்கும் பல குழுக்களில், இவனும் உறுப்பினராக சேர்ந்துள்ளான்.

இவனுக்கு தனியாக படுக்கையறை என்பதால், தினமும் அதிகாலை, 2:00 மணி வரை, இணையதளத்தை பயன்படுத்துவது பெற்றோருக்குத் தெரியவில்லை. ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை... கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுதான் நடக்கிறது.

தினமும், பள்ளிக்கு செல்லாமல், வருகைப் பதிவேடு குறைந்து, பிரச்னை பெரிதான பின், விளையாடும் நேரத்தை குறைக்கச் சொல்லி, அவனது பெற்றோர் வற்புறுத்தி உள்ளனர்.

அவ்வளவு தான்... பயங்கர எரிச்சல், கோபம் என்று ஆக்ரோஷமாகி விட்டான் பையன். அவனிடம் எதுவும் பேச முடியாமல் போகவே, நெருங்கிய குடும்ப நண்பரின் ஆலோசனையில், என்னிடம் அழைத்து வந்தனர்.

பசி, துாக்கம் என்று சராசரி விஷயங்கள் எதையும் அவனால் இயல்பாக செய்ய முடியவில்லை. எல்லா கோணங்களிலும் அலசி, அவனுக்கு, 'இன்டர்நெட் கேமிங் டிசார்டர்' மற்றும் மன அழுத்தம் இருப்பது தெரிந்தது.

தேவையான மனநல ஆலோசனை, பயிற்சிகளுடன், மருந்து, மாத்திரைகள் என, ஒருங்கிணைந்த மருத்துவ உதவியை, டாக்டர்கள் குழுவே தந்தது. அதன்பின், ஒரு மணி நேரமாக விளையாடும் நேரம் குறைந்து உள்ளது.

'இன்டர்நெட் கேமிங் டிசார்டர்' என்பது என்ன?

குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரை பாதிக்கும் பிரச்னை இது. சமீப ஆண்டுகளில், மருத்துவ உலகத்தில் இது ஒரு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

'ஆன் - லைன்' விளையாட்டு, சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு என்று ஆரம்பிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, மன அழுத்தம், தற்கொலை எண்ணம், உடல் நல குறைபாடுகள், படிப்பில் கவனம் இல்லாமல் போவது, வேறு எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, உடல் பருமன் என்று பல பிரச்னைகள் வரும்.

இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர், எந்த உடல் அசைவும் இல்லாமல், சிலை போல இருப்பதும் உண்டு. சமூக வலைதளங்களில் அடிமையானவர்களுக்கு சிகிச்சை தந்து, வெளியில் கொண்டு வருவது, போதைக்கு அடிமையானவர்களை மீட்பதைக் காட்டிலும் சவாலானது.

ஆய்வு

எங்கள் மருத்துவமனையில், 150 பெற்றோரிடம் செய்த ஆய்வில், 4 வயது குழந்தைகள், வாரத்தில், 24 மணி நேரம், 'ஆன் லைனில்' விளையாடுகின்றனர்.

வாரத்தில், 29 மணி நேரம் இணையதளத்தில் விளையாடும் குழந்தை, படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறது. இந்த நேரம், சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்டதை விடவும், மூன்று மடங்கு அதிகம்.

வருமுன் காப்பதே சிறந்த வழி. இணையதளம் என்பது, அணு ஆற்றல் போன்றது... முறையாக பயன்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால், பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்; அப்படி இல்லாவிட்டால், அணுகுண்டைப் போல ஆபத்தாக முடியலாம்.

டாக்டர் ஆர்.வெங்கடேஸ்வரன்

குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.

044 - 4200 1800






      Dinamalar
      Follow us