தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்த உறைவால் தடைபடும் பிராண வாயு!

ரத்த உறைவால் தடைபடும் பிராண வாயு!

ரத்த உறைவால் தடைபடும் பிராண வாயு!


PUBLISHED ON : ஜூலை 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா பாதித்து, குணமான சில வாரங்களுக்கு பின், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால், கொரோனா சிகிச்சையின் போதே ஏற்பட்டு விடுகிறது.

ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, தீவிர பாதிப்பாக எதிர்பாராத நேரத்தில் வெளிப்படுவது உண்டு. நீண்ட கால பாதிப்பாக இருந்து, நோய் முற்றியதும், தீவிர அறிகுறியாக வெளிப்படவும் செய்கிறது.

ரத்தக் குழாயின் உட்புறச் சுவரில் உள்ள, 'எண்டோதீலியம்' திசுக்களை கொரோனா வைரஸ் அழிப்பதால், அந்த இடத்தில் ரத்த உறைவு ஏற்படுகிறது. இடுப்பு, கால்களில் உள்ள சிறு ரத்தக் குழாய்களில் இப்படி அடைப்பு ஏற்பட்டு, முழுதும் ரத்த ஓட்டம் நின்று போவதே, 'ஏ - வாஸ்குலார்' எனப்படும்.

இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், 'ஹார்ட் - அட்டாக்;' மூளையில் என்றால், 'ஸ்ட்ரோக்' என்ற அடைப்பு ஏற்பட்ட உறுப்பு செயலிழந்து விடுகிறது. இதே போல வயிறு, இதயம், கால்கள் என்று உடலின் அனைத்து பாகங்களுக்கும், சீரான ரத்த ஓட்டத்தை தருவதற்கு முக்கிய ரத்த நாளங்கள் உள்ளன. குடலுக்கு ரத்த ஓட்டத்தை தர, மூன்று முக்கிய ரத்த நாளங்கள் உள்ளன. அவை கல்லீரல், மண்ணீரல், வயிறு என வயிற்றின் உள் உறுப்புகளுக்கு சீராக ரத்த ஓட்டத்தை தரும். இதில் தடை ஏற்பட்டாலும் வயிறு பகுதியில் தீவிர வலி வரும்.

நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனும், ஊட்டச்சத்துகளும் ரத்த நாளங்கள் வழியாகவே செல்கின்றன. ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக, தலை முதல் கால் வரை தடங்கல் இல்லாத சீரான ரத்த ஓட்டத்துடன் இருந்தால் தான், எந்தப் பிரச்னையும் வராது. ரத்த நாள அடைப்பால் அதிகம் பாதிக்கப்படுவது கால்கள்.

கொரோனா பாதித்தால், குறிப்பாக இணை நோய்கள் இருந்தால், சிகிச்சைக்கு பின், கால்களில் வலி, மதமதப்பு போன்ற எந்த அறிகுறிகள் இருந்தாலும், துவக்கத்திலேயே கவனிக்க வேண்டும். கவனிக்காமல் இருந்தால் ஆக்சிஜனும், ஊட்டச்சத்துகளும் இல்லாமல் செல்கள் அழிந்து விடும். தீவிர பாதிப்பில் கால்கள் கறுப்பாக மாறிவிடும்.

ரத்தக் குழாயில் ஏற்பட்ட உறைவால், எந்த அளவு அடைப்பு உள்ளது, அழற்சி இருக்கிறதா, உள் வீக்கம் உள்ளதா, பிரச்னையின் தீவிரம் எவ்வளவு என்பதை தெளிவாக அறிந்த கொள்ள, தனித் தனியே நவீன பரிசோதனைகள் உள்ளன.வைரஸ் பாதிப்பு இருந்தவர்கள், இருப்பவர்கள், இணை நோய் உள்ளவர்கள், எந்த சிறிய அறிகுறியையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.

டாக்டர் எம். ராஜ்குமார்,

ரத்த நாள சிறப்பு மருத்துவர்,

சென்னை

98410 25996

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us