PUBLISHED ON : ஆக 22, 2020

'கர்ப்பிணிகள், ஆக்சிஜன் அளவை அடிக்கடி சோதித்துக்கொள்ள வேண்டும்' என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்துக்கு முன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது, தற்போது நடைமுறையில் உள்ளது.
அரசு மருத்துவமனை டாக்டர் கூறியதாவது:
ஒருவருக்கு ரத்த ஆக்சிஜன் அளவு, 95 முதல் 100 சதவீதம் வரை இருக்க வேண்டும். கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு சராசரி அளவை விடக் குறையும்போது, சிக்கல் ஏற்படும்.
கர்ப்பிணிகளுக்கு இவ்வாறு நிகழும்போது, அது அவர்களுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கும்.
வீடுகளில், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம், கர்ப்பிணிகள், ஆக்சிஜன் அளவை அடிக்கடி சோதித்துக்கொள்வது நல்லது. ஆக்சிஜன் அளவு குறையும்போது, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.
கொரோனா தொற்று உள்ளவர்களில் பலர் மற்றும் ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு, ஆக்சிஜன் அளவு குறையும்போது, உடனடியாக மருத்துவமனையை நாடலாம். அப்போதுதான், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

