தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கர்ப்பிணியர் இருமுறை பல் துலக்க வேண்டும்!

கர்ப்பிணியர் இருமுறை பல் துலக்க வேண்டும்!

கர்ப்பிணியர் இருமுறை பல் துலக்க வேண்டும்!


PUBLISHED ON : மார் 09, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 09, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாய் சுகாதாரம், பல் பராமரிப்பு என்பதில், இரு பாலருக்கும், வெவ்வேறு விதங்களில் தேவைகள் உள்ளன என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களை பொறுத்த வரை, பல் பராமரிப்பு தேவைகள் என்பது, அந்தந்த வயதிற்கும், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கும் ஏற்ப மாறுபடும். இதனால், குழந்தை பருவம்,வயதுக்கு வந்த பின், கர்ப்ப காலம், மெனோபாஸ், முதுமை என, ஒவ்வொரு நிலையிலும், அந்தந்த உடல் செயல்பாடுகளின் தேவைக்கு ஏற்ப, பராமரிப்பும் மாறுபடும்.

இளம் வயதில்..



வளர் இளம் பருவத்தில், பெண்களின் உடலில், பல ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். வாய் சுகாதாரம், பல் - தாடை எலும்பு ஆரோக்கியமாக இருக்க, ஆண்டிற்கு ஒருமுறை, பல் டாக்டரிடம் சென்று சுத்தம் செய்வதும், பற்களில், சிறு துளைகள் இருந்தால் அடைப்பதும், தாடை எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதும் மிக அவசியம். தேவைப்படும் நேரத்தில், சரியான மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

25 - 35 வயதில்...



கர்ப்பத் தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது, ஈறுகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், ஈறுகள் தொடர்பான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால், பல்லை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, ஈறுகள் மற்றும் பல் எடுத்த இடத்தில் ஏற்படும் காயங்கள் ஆறுவது தாமதமாகலாம்.கர்ப்பத் தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள், பல் பிரச்னைகளுக்கு, டாக்டரிடம் ஆலோசனைக்கு செல்லும் போது, தாங்கள் பயன்படுத்தும் கர்ப்பத் தடை மாத்திரைகள் பற்றிய விபரங்களை, முதலிலேயே தெரிவித்து விட வேண்டியது முக்கியம்.

நீண்ட நாட்களாக இருக்கும் பல் கோளாறுகளை சரி செய்யாமல், கர்ப்பம் தரித்தால், பற்களில் ஏற்பட்ட கோளாறு, கர்ப்பிணியையும், அவரின் கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கலாம்.

எக்ஸ் - ரே



கர்ப்ப காலத்தில், எக்ஸ் - ரே பரிசோதனை செய்வதை தவிர்ப்பது நல்லது. செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால், முடிந்த அளவு தள்ளிப் போடுவது நல்லது. பல் கோளாறுகளுக்காக, டாக்டரை பார்க்க செல்லும் போது, கர்ப்பிணியாக இருந்தால், தான் கர்ப்பம் அடைந்து இருப்பதை சொல்ல வேண்டும். அதேபோல, குழந்தை பெறுவதற்கான திட்டமிடல் இருந்தால், அதையும் மறைக்காமல் சொல்ல வேண்டும். அப்போது தான், எக்ஸ் - ரே போன்ற பரிசோதனைகளையும், பல் பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்க, அதற்கு தகுந்தவாறு செய்ய முடியும்.

கர்ப்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரான் ஹார்மோன் சுரப்பு அதிக அளவில் இருப்பதால், ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இதை கவனித்து, உரிய சிகிச்சை தர வேண்டும். அப்படியே விட்டால், ஈறுகளில் தீவிர நோய்களை உண்டாக்கலாம். சிகிச்சை செய்யாமல் இருந்தால், எடை குறைவான, குறைப்பிரசவ குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம்.

பராமரிப்பு



பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளை தவிர்க்க, கர்ப்பிணி, ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில், சிறிது உப்பு கலந்து, வாய் கொப்பளிக்க வேண்டும். நாக்கையும், சுத்தமாக பராமரிக்க வேண்டும்.ஈறுகளின் வீக்கம் மற்றும் ரத்த கசிவு இருந்தால், 'ஸ்கேலிங்' என்று சொல்லப்படும், பல் மருத்துவரிடம் சுத்தம் செய்ய வேண்டும். இதையும், கர்ப்ப காலத்தின் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மாதங்களில் மட்டும் செய்ய வேண்டும். 'பேக்கிங் சோடாவை' தண்ணீரில் கலந்து, பற்களில் தேய்த்து, 30 வினாடிகள் வைத்திருந்து கழுவலாம். இதனால், பிரசவ காலத்தில், அதிகப்படியான அமில சுரப்போடு சேர்ந்து, காலை நேரங்களில் ஏற்படும் அசவுகரியங்கள் சரியாவதோடு, அமில சுரப்பையும் சமன் செய்யும்.

அமிலம் அதிக அளவில், பற்களில் படுவதால் ஏற்படும் பல் சிதைவையும் தடுக்கும். கர்ப்பத்தின் ஆறாவது வாரத்தில், கருவில் பற்கள் உருவாகும். இந்த சமயத்தில், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள்உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை, கர்ப்பிணி சாப்பிட வேண்டியது முக்கியம். கர்ப்பிணி சாப்பிடும் உணவிலிருந்தே, தேவையான சத்துக்கள், கருவில் வளரும் குழந்தைக்கு கிடைக்கும். ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், குழந்தையின் பல் வளர்ச்சியை பாதிக்கும்.

மெனோபாஸ்



மாதவிடாய் நின்ற பின், வாயில் வறட்சி ஏற்படுவது,ஈறுகளில் புண் ஏற்படுவது, பெண்களுக்கு எச்சில் சுரப்பு குறைவதால் ஏற்படும் பொதுவான பிரச்னை. இவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றால், எச்சில் சுரப்பை துாண்டக்கூடிய சில மருந்துகளை பரிந்துரைக்கலாம். இந்த வயதில், கால்சியம் சத்து குறைபாடால், 'ஆஸ்டியோபோபோரோசிஸ்' என்ற தாடை எலும்புகள் வளையும் அபாயம் உள்ளது. இதனால், பற்கள் வலிமை இழப்பதோடு, பல் விழுந்து விடவும் செய்யலாம்.கால்சியம் மற்றும் வைட்டமின் - டி அடங்கிய உணவுகளை, தினசரி சேர்த்துக் கொள்வதோடு, தேவைப்படும் நேரத்தில் மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.

வயது முதிர்வில்...



முதுமை என்பது, இயல்பாக, இயற்கையாக நடக்கும் விஷயம். முதுமையில் ஏற்படும் பல்வேறு உடல் கோளாறுகளுக்காக சாப்பிடும் மருந்துகள், பற்கள், ஈறுகளில் தீவிர பிரச்னைகளையும், சிக்கலையும் ஏற்படுத்துகின்றன. வயதானால் ஏற்படும், 'டிமென்சியா' எனப்படும் மறதி நோய், பசியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, பல் சுகாதாரத்தில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பற்கள் விழுவது, பல் இடையில் உள்ள இடைவெளியை சரியாக அடைக்காமல் இருப்பது போன்றவை, உணவை சுவைக்கும் திறனையும், ருசியையும் பாதிக்கிறது.இந்திய பல் மருத்துவ சங்கம், பெண்கள் தங்களின் ஒவ்வொரு வயதிலும், உடலில் மாற்றங்கள் ஏற்படும் போது, தவறாமல் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற அறிவுறுத்துகிறது.

டாக்டர் ஆர்.பி. ரமாதேவி,

பல் மருத்துவர்,

சென்னை

90809 15595


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us