தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/தடுப்பு மருந்தை தடுக்கும் 'கோவிட் 19'!

தடுப்பு மருந்தை தடுக்கும் 'கோவிட் 19'!

தடுப்பு மருந்தை தடுக்கும் 'கோவிட் 19'!


PUBLISHED ON : ஆக 06, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளால் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது, தடுப்பூசி போடுவது என்று அனைத்து வருமுன் காக்கும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தடைபட்டு உள்ளன.இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தடுப்பூசி தான். தடுப்பூசி போட்டு கொள்வதால் சில வைரஸ், பாக்டீரியா தொற்றுகளை தவிர்க்க முடியும். கடந்த பல ஆண்டுகளாக இது நடைமுறையில் இருக்கும் வழக்கம் தான். ஆனால், இந்த, 'கோவிட் 19' காலத்தில், வழக்கமாக போட்டு கொள்ள வேண்டிய தடுப்பூசி போட யாரும் முன் வருவதில்லை.

இதனால் வேறு வைரஸ், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, தவிர்க்க முடிகின்ற உடல் பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வந்து விடுமோ என்று, மருத்துவர்கள் மத்தியில் அச்சம்.ஆண்டுதோறும், 20 - 30 லட்சம் இறப்புகள், வழக்கமாக போடும் தடுப்பூசிகள் மூலம் தவிர்க்க முடிவதாக, உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரம் சொல்கிறது.

நம் நாட்டை பொறுத்தவரை, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்ததில் பெரும் பங்கு, தடுப்பூசிக்கு உள்ளது. இந்த கோவிட் 19 போராட்டத்தில், இந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய தடுப்பு மருந்துகளை கொடுக்க முடியாமல் போகிறது.

தடுப்பூசியால் தடுக்கப்பட்ட நோய்கள் எவை?

தேசிய அளவில் தொடர்ந்து, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்ததில், போலியோ இல்லாத நிலையை உருவாக்க முடிந்துள்ளது. அதே போன்று, பச்சிளம் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் பாக்டீரியா தொற்றான டெட்டெனசிற்கு தடுப்பு மருந்தால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

வேறு என்ன நோய்களுக்கு தடுப்பு மருந்து உள்ளது?

கொசுக்களால் பரவும் ஜப் பனீஷஎன்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை காய்ச்சல், ரோட்டா வைரசால் வரும் வயிற்றுப் போக்கு, நிமோனியா, டிப்தீரியா போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளன

இந்த சூழலில் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

கோவிட் 19 பரவும் இந்த நேரத்திலும், மற்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க, டாக்டர் கொடுத்த அட்டவணைப்படி, தடுப்பு மருந்தை தவறாமல் குழந்தைக்கு தர வேண்டும். வேறு ஏதேனும் காரணத்திற்காக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் குழந்தைக்கு, தடுப்பு மருந்து தரும் கெடு இருந்தால், மறக்காமல் தர வேண்டும்.

கோவிட் 19 பரவுவதால் தடுப்பு மருந்து தரக் கூடாது என்பதில்லை. அட்டவணைப்படி, பிறந்த குழந்தைக்கு தடுப்பு மருந்து தர வேண்டியது கட்டாயம்.'லாக் டவுன்' காரணமாக மருத்துவரிடம் செல்ல முடியாத நிலையில், 'பூஸ்டர் டோஸ்' வேண்டுமானால் தாமதமாக போட்டு கொள்ளலாம்.

தடுப்பு மருந்து கொடுப்பதில் தவிர்க்க வேண்டியது என்ன?

வைரஸ் தொற்று இருக்கும் இந்த நேரத்தில், முகாம்களில் சென்று தடுப்பு மருந்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கோவிட் 19 தொற்றால் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை, தனிமைப்படுத்துதல் என்று அனைத்தும் சரி செய்த பின்பே தடுப்பு மருந்து தர வேண்டும்.

தடுப்பூசி போடாவிட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன?

கோவிட் 19 காரணத்திற்காக வழக்கமாக போடும் மற்ற தடுப்பு மருந்தை போடாவிட்டால், தட்டம்மை போன்ற எளிதில் பரவும் தொற்றுகள் ஏற்படும். கடந்த, 2014 - 15ல் எபோலா வைரஸ் பரவிய நேரத்திலும், வெளியில் வர பயந்து, வழக்கமாக போடும் தடுப்பு மருந்தை போடவில்லை. இதனால், மலேரியா, அம்மை, காசநோய், எச். ஐ. வி., /எயிட்ஸ் பாதிப்பால் இறந்தோரின் எண்ணிக்கை, எபோலாவை காட்டிலும் அதிகம். தற்போதும் கோவிட் 19 ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும், தடுப்பூசி போடாததால் அதிக பதிப்பு வரலாம்.

உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிட் 19 பரவாமல் இருக்க, பாதுகாப்பு செய்யப்பட்டு, தமிழக சுகாதார துறையின் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படுகிறது. அதனால், குழந்தைகளுக்கு சரியான அட்டவணையில் தடுப்பு மருந்து தர தயங்க வேண்டாம்.வெளியில் செல்லும் போது, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவது, மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் சானிடைசரை உபயோகித்து, பாதுகாப்பாக குழந்தையை அழைத்து வந்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன்

இயக்குனர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை

சென்னை

044 - 4200 1800


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us