sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கேள்வி - பதில்

/

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : மே 20, 2015

Google News

PUBLISHED ON : மே 20, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 நான் தனியார் அலுவலகத்தில், விளம்பர பிரிவில் பணிபுரிகிறேன். தினமும், 100 கி.மீ., வரை, இருசக்கர வாகனத்தில் பயணிப்பேன். தூசி மிகுந்த காற்று, கண்களில் படுவதால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?

- சுரேஷ், சென்னை.

ஒரு பொருளின் துகள், கண்களைத் தாக்கினால் கண்களைத் தேய்க்காமல், மருத்துவரிடம் செல்ல வேண்டும். காற்றில் கலந்து வரும் தூசிகளின் பாதிப்பால், கண்களில் புண் ஏற்பட்டு பார்வை இழக்கக்கூடிய அபாயம் உண்டு. எனவே, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, குளிர் கண்ணாடி அல்லது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இன்றைய இளைஞர்கள், தலைக்கவசம் அணிகின்றனரே தவிர, அதில் கண்களை பாதுகாக்க கொடுத்திருக்கும் பிளாஸ்டிக் முகயுறைகளை அணிய மறுக்கின்றனர். அதையும் அறிந்து பயணித்தால், தூசுகளினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து, கண்கள் தப்பிக்கும்.

- நமிதா புவனேஸ்வரி, கண் அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

 எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகள் வராமலிருக்க, ஆலோசனைகள் கூறுங்களேன்?

- விதார்த், திருவான்மியூர்.

அரைமணி நேரத்துக்கு மேல், ஒரே நிலையில் அமரக்கூடாது; ஒரே நிலையில் தொடர்ந்து உட்காரவோ, நிற்கவோ கூடாது. தொடர்ந்து ஒரு வேலையை அரைமணி நேரத்திற்கு மேல் செய்யாமல், இடைவெளி விட்டு தொடர வேண்டும். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு, வைட்டமின் 'டி' அவசியம். அதனால், காலை மிதமான வெயிலில் நடைப்பயிற்சி செய்யலாம். உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பது, மூட்டுகளை பாதுகாக்கும். அதிக எடையைத் தாங்க முடியாமல், மூட்டுகள் தேய்ந்துவிடும் என்பதால், எடை அதிகமாக இருப்போர், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், மூட்டு வலி குறையும்.

- வைரவன், எலும்பு நிபுணர், திண்டுக்கல்.

 என் குழந்தைக்கு ஒன்றரை வயது. இன்னும் பற்கள் முளைக்கவில்லை. ஏன்? பற்கள் முளைக்கும்போது வலி இருக்குமா?

- திவ்யா, மதுரை.

பொதுவாக குழந்தைகளுக்கு, ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். பால் பற்கள், நிரந்தர பற்களை காட்டிலும் வெண்மையாகவும், அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்கு, பல் முளைப்பதில் தாமதம் ஏற்படலாம்; அதற்கு கவலைப்படத் தேவையில்லை. பற்கள் முளைக்கும் நேரத்தில், குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு காய்ச்சல், வலி போன்றவையும் ஏற்படலாம்; இது பொதுவான பிரச்னையே. பற்கள் முளைக்கும் போது, ஈறுகளில் உறுத்தல் இருக்கும். இதனால், கையில் கிடைத்ததை எல்லாம் குழந்தை, வாயில் போட்டுக் கொள்ளும். ஆகவே வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். அந்த தருணத்தில், குழந்தையை, பெற்றோர் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

- அரவிந்த் ராமநாதன், பல் மருத்துவர், சென்னை.






      Dinamalar
      Follow us