தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜூன் 10, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

 குழந்தைகளிடம் பந்தயக் குதிரைகள் போன்று பெற்றோர் நடந்து கொள்கின்றனரே... ஏன்?

ராஜேஸ்வரி, திருவான்மியூர், சென்னை.

காலம் காலமாக குழந்தைகளிடம் படிப்பு மட்டுமில்லாமல் கலை, விளையாட்டு போன்ற மற்ற திறமைகளையும் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகின்றனர். இது போதாது என்பதுபோல், 'டிவி'களிலும் குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, நகைச்சுவை போட்டி என பல நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவுடன் வந்துக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்கள் குழந்தைகளை பந்தய குதிரைகள் போல் ஓட வேண்டும் என்று நினைத்து, குழந்தைகள் மீது மிகப் பெரிய சுமையை சுமத்துகின்றனர். போட்டியில் கலந்து கொண்டால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, மன அழுத்தம் தாழ்வு, உயர்வு மனப்பான்மை பற்றி ெபற்றோர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். குழந்தைகளுக்கு எவ்வளவு திறமைகளை வேண்டுமானாலும் கற்றுக் கொடுக்கலாம், ஆனால் எல்லா போட்டியிலும் சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் ஆபத்தானது.

நாகேஸ்வரி, மனநல நிபுணர், சென்னை.

 ஓரு குழந்தைக்கு காற்றுதான் முதன்மையான உணவு என்று சொல்லப்படுவது... உண்மையா?

கல்யாணி, திருக்கழுக்குன்றம்

தாயின் வயிற்றில் உருப்ெபற்று, ௧0 மாதங்களாக தொப்புள் கொடி வழியாகச் சக்தியை பெற்று வளர்கின்ற குழந்தையை, 'போதும் குழந்தாய்! இனி உலகிற்கு வா! தனித்து வளர வேண்டும். என்னிலும் ஆரோக்கியமாக வளர வேண்டும்' என்று தாய் நினைத்து பிரசிவிக்கிறாள். தாயின் வயிற்றை விட்டு வந்ததும், குழந்தை செய்யும் முதல் வேலை தனக்கான உணவை, ஆற்றலைக் காற்றில் இருந்து பெறுவதுதான். தன் மூச்சுப் பாதையை முழுமையாகத் திறப்பதற்காகத்தான் வீலென்று குரல் கொடுக்கிறது சிசு. எனவே காற்றுதான் குழந்தைக்கான முதல் உணவு.

மா. வெங்கடேசன், குழந்தைகள் நல நிபுணர், சென்னை.

 நான் நான்கு மாத கருவை சுமந்து கொண்டிருக்கிறேன். கருவுற்ற காலங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா?

சந்தியா, அயன்புரம், சென்னை.

கருதரித்த முதல் மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்போது, அதிகமான உடல் இயக்கங்கள், அழுத்தமான செயல்முறைகளால் சிலருக்கு கருக்கலைய வாய்ப்புகள் உள்ளன. இதனால், சிலருக்கு ரத்தப்போக்குக் கூட ஏற்படலாம். எனவே, தம்பதியரிடம், சில மாதங்களுக்கு கவனமாக இருங்கள் என்று சொல்வது கருவை பாதுகாக்கும் நோக்கில்தான். சிலர் ஒன்பது மாதங்கள் வரை தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டாலும் சுகப்பிரசவம் நடந்திருக்கிறது. காரணம், தம்பதியரின் மனவலிமையும், அவர்களுக்குள் இருக்கும் சவுகரியத்தையும் பொறுத்ததே.

உஷா குமார், மகப்பேறு மருத்துவர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us