தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜூலை 01, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

ஜான்சி, அரக்கோணம்: என் மகள் 5ம் வகுப்பு படிக்கிறாள். எவ்வளவு கண்டித்தும், இடதுகை பழக்கமாகவே எந்த வேலையையும் செய்கிறாள். எழுதுவதும் இடது கையால் தான். இதற்கு காரணம் என்ன?

நமது மூளையின் இடது அரைக்கோளம், வலப்புற உடலையும், வலப்பக்க அரைக்கோளம், இடதுபுற உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இடது அரைக்கோள மூளை வலிமை வாய்ந்ததாக இருப்பதால் தான், பலர் வலது கையால் எழுதுகின்றனர். இடது கையால் எழுதுவோரின் வலது அரைக்கோள மூளை வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. மூளையின் இருபக்கமும் ஒன்றை ஒன்று ஆட்சி செய்யாமல் இருந்தால், அந்த மனிதன் இரு கைகளாலும் எழுதுபவராக இருப்பார். இக்கட்டான சூழ்நிலைகளில் திடமான முடிவுகளை எடுப்பர், இடது கை பழக்கமுள்ளவர்கள்.

பிரகாஷ், நரம்பியல் நிபுணர், சென்னை.

மெட்டில்டா, அயன்புரம், சென்னை: சிலருக்கு கண்கள் நீல நிறத்தில் இருப்பது ஏன்?

கண்விழி, மூன்று அடுக்குத் திசுக்களால் ஆனது. 'ஸ்கிளீரா' என்ற விழி வெண்படலம்; 'கோராய்டு' என்ற விழியடி கரும் படலம்; 'ரெட்டினா' என்ற பார்வை படலம். இவற்றில், 'கோராய்டு' படலம், நடுவில் உள்ளது; ரத்த ஓட்டம் அதில் தான் இருக்கும். மேலும் நிறமியுள்ள படலமும் கூட. இது தான், கருவிழி அல்லது விழித்திரை எனப்படுகிறது. இதன் மையத்தில் உள்ள துளை தான், கண் பார்வை எனப்படும். விழித்திரையில், 'மெலனின்' எனும் நிறமிகள் உள்ளன. இந்த நிறமிகளின் தன்மையைப் பொறுத்து, கருவிழி நீலநிற

விழி போன்ற மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஜீன்களின் செயல்கள், இந்த நிறமிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகின்றன.

காளீஸ்வரி, கண் நிபுணர், சென்னை.

ராமநாதன், பாண்டிச்சேரி: எனக்கு வயது, 43. நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் உள்ளது. மது குடிக்கும் பழக்கமும் உள்ளது. இது என் உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்குமா?

மது குடிப்பதே ஆபத்து; அதிலும் நீரிழிவு உள்ளது; இருந்தாலும் குடிக்கலாமா என்று கேட்கிறீர்கள். நீரிழிவு நோய் உள்ளோர், மது அருந்தும் போது, ரத்தத்திலுள்ள குளூக்கோசின் அளவு குறைந்து, மயக்கமடையும் நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மேலும் அதிக அளவில் மது அருந்தும் போது, நரம்பு மண்டலம் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆல்கஹால், வெறுமனே கலோரிகள் மட்டுமே கொடுப்பதால், உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு நோயுள்ளோர் மது அருந்தும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

ராஜேந்திரன், நீரிழிவு நிபுணர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us