நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்வதைக் காட்டிலும், 'சைக்கிளிங்' செய்வதால் உடல் எடை குறையுமா?
க. வினோத், திருப்பூர்.
# கண்டிப்பாக குறையும். உடல் எடையைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று, கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 'சைக்கிளிங்' செய்தாலே எடையைக் குறைக்க முடியும்.
# 'சைக்கிளிங்' செய்யும் போது, எவ்வித கட்டுப்பாடும் இல்லை. சாதாரணமாகவே ஓட்டலாம்.
டூ மூட்டு வலிக்கு முக்கிய காரணமே உடற்பயிற்சியின்மை தான். அதைத் தவிர்க்க சைக்கிளிங் சிறந்த வழி. மூட்டு வலி இருப்போர் எளிதாக, சைக்கிளிங் செய்ய முடியும்.
# 'சைக்கிளிங்' செய்வது 'ஆஸ்டியோபொரோசிஸ், ஆர்த்ரைடிஸ்' போன்ற மூட்டுப் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும். தொடைகள் வலுவாகும்.
# தவறான வாழ்வியல் காரணமாகவே, 'டைப் ௨' வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் வருகிறது. எனவே ,'சைக்கிளிங்' செய்வதால் கெட்ட கொழுப்புகள் கரையும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

கே.சுந்தர், எலும்பு நிபுணர், சென்னை.
நான் உட்கார்ந்து கொண்டே பல மணிநேரம் வேலை செய்கிறேன். முதுகுவலி இருக்கிறது. கூடவே ஜீரண கோளாறும் ஏற்படுகிறது. இதனால் வேறு என்ன கோளாறுகள் ஏற்படும்?

ஆ. நான்சி, கேளம்பாக்கம்.
உடல் உழைப்பின்றி, வேலை செய்வதால் பெரிதும் பாதிக்கப்படுவது இதயம் தான். ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் வேலை செய்வதால், உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை. இதனால் இதயத்தைச் சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள், இதய நலனை சீர்குலைய செய்கின்றன. நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் முறையானது, உடலில் ஹார்மோன் சமநிலையை கெடுக்கிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் இதேமுறை நீண்ட நாட்கள் தொடரும் பட்சத்தில், கணையத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஒருநாளில் நாற்காலியில், எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்தே வேலை செய்வது, உங்கள் இடுப்பு எலும்பை வலுவிழக்க செய்யும். இடுப்பு வலியை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இல்லையேல் பின்னாட்களில் இது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எ.ராஜ்குமார், பொது மருத்துவர், சென்னை.