தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜன 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு வயது, 30 ஆகிறது. அடிக்கடி தலைவலி வருகிறது. உயர் ரத்த அழுத்தம் இருக்கும் என்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகள் எவை?

கா.வாசு, தேனி.


இந்தப் பிரச்னையைக் கண்டிப்பாக, 90 சதவீத மக்கள் சந்தித்திருப்பர். ஆனால், தலைவலி தினசரி தொடர்ந்தால், உயர் ரத்த அழுத்தத்தால், மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். எனவே, உடனே மருத்துவரை பாருங்கள். சமீபகாலமாக, சரியாக மூச்சு விட முடியவில்லையா? அப்படியெனில், உடனே உஷாராகுங்கள். ஏனெனில், உயர் ரத்த அழுத்தத்தால், இதயத்தின் வேலைப்பளு அதிகரித்து, ரத்தத்தை சீராக நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்த முடியாமல் போய்விடும்.

வெ.சக்ரவர்த்தி, பொது நல மருத்துவர், சென்னை.

நான் ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். ஐஸ் க்ரிம் சாப்பிட ஆசையாக உள்ளது. கர்ப்பிணிகள் ஐஸ் க்ரீம் சாப்பிடலாமா?

தெ.சுஜாதா, சென்னை.


ஐஸ் க்ரீம் சாப்பிடலாம். சளி பிடிக்காமல் இருக்கும் வரை பிரச்னை இல்லை. ஏப்ரல், மே மாதங்களில், கோடைக்கு இதமாக இருக்கிறதென்று, தினசரி ஐஸ் க்ரீம், ஜில்லென்று ஜூஸ் வகைகளை சாப்பிட்டுப் பழகினால், அது கடுமையான சளி, இருமலில் கொண்டுவிடும். கர்ப்பக் காலங்களில், சாதாரண நாட்களில் எடுத்துக் கொள்ளும் இருமல், சளி மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது. அவை, வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் பெரியவர்கள், கர்ப்பிணிகளை அதிக குளிர்ச்சியான, அதிக சூடான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை.

- வா.சங்கமித்ரை, மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை.

பெண்கள் தாம்பத்ய உறவில் ஈடுபட்ட உடன் சிறுநீர் கழிக்க வேண்டுமா? ஏன்?

சு.சியாமளா, மன்னார்குடி.


பெண்கள் தாம்பத்ய உறவில் ஈடுபட்ட பின், சிறுநீர் கழிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆண்களுக்கு, விந்தணு மற்றும் சிறுநீர் கழிக்க பொதுவான பாதை மட்டுமே உள்ளதால், சிறுநீரில் உள்ள நச்சுக்கள், பெண்களின் இனப்பெருக்க பாதையினுள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால், பெண்ணுறுப்பில் நோய் தொற்று ஏற்படலாம்.

எனவே, உறவிற்குப் பின், பெண்கள் சிறுநீர் கழித்துவிட்டு, தங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவ வேண்டும். எனினும், கர்ப்பத்தை எதிர்பார்த்து உள்ளவர்கள், சிறிது நேரம் கழித்து, பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். உடனடியாக செய்தால், சில சமயங்களில், பெண்ணுறுப்பில் தங்கியிருக்கும் ஆணின் விந்தணு, கர்ப்பப்பையினுள் செல்லாமல் வெளியேறி, கருத்தரிக்க வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

ஆ.சாந்தி, மகளிர் நல மருத்துவர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us