sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கேள்வி-பதில்

/

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்


PUBLISHED ON : ஜன 27, 2016

Google News

PUBLISHED ON : ஜன 27, 2016


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை காலத்தில் கிடைக்கும் பழங்களை எல்லாரும் சாப்பிடலாமா?

கே.சாந்தி, மன்னார்குடி.

கோடை காலத்தில், தர்பூசணி, கிர்னி, மாம்பழம் போன்றவை சீசன் பழங்கள். அவற்றை தினசரி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள், மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. மூச்சிரைப்பு நோய் உள்ளவர்கள், தர்பூசணி, கிர்னி பழங்களை தவிர்க்க வேண்டும். அவை, நுரையீரலில் சளியை உண்டாக்கி, மூச்சிரைப்பு பிரச்னையை அதிகரிக்கும்.மங்கஸ்தான்: நம்மில் பலருக்கு, மங்கஸ்தான் பழம் பற்றி தெரியாது. நேரம் தவறி சாப்பிடுபவர்கள், குடல் ஒவ்வாமை உள்ளவர்கள், பெருங்குடல் பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து மங்கஸ்தான் சாப்பிட்டால் குணம் பெறலாம்.அத்திப்பழம்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள், அத்தி பழத்தை சாப்பிடலாம். கருமுட்டை வளர்ச்சி அடையாமல் இருக்கும் பெண்கள் தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட வேண்டும். அத்திக்காயில் கூட்டு, பொரியல், துவையல் செய்து சாப்பிடலாம்.பப்பாளிப் பழம்: பப்பாளி கண்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லது. வாழைப்பழம்: வாழைப்பழத்தை தினசரி சாப்பிடலாம்; வளரும் குழந்தைகளுக்கு இது சிறந்தது. அதேசமயம், அதிக எனர்ஜி உள்ள, 'கார்போஹைட்ரேட்' மிகுந்த பழம் என்பதால், குறைவாக சாப்பிடலாம். வயிற்றுப்புண் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.மாதுளம் பழம்: உடல்சூடு, வயிற்றுப்புண் பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து மாதுளை. இதிலுள்ள சிவப்பு நிறமிகள், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தி, ரத்தச்சோகையை போக்கும்.

கல்லீரலுக்கு மிகவும் உகந்தது. உடல் எடையை சீராக வைக்க உதவும்.

ர.ரங்கபாஷ்யம், சித்த மருத்துவர், சென்னை.

யாரெல்லாம் கண் தானம் செய்யலாம்; வயது வரம்பு உள்ளதா?

- ஏ.ரேகா, சென்னை.

யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். வயது தடையில்லை. தொற்று கிருமிகள், வெறிநாய்க்கடி, கல்லீரல் அழற்சி, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை இருந்து இறந்தவர்கள், கண்களைத் தானம் செய்ய முடியாது. கார்னியாவில் வடுக்கள் இருந்தாலும், தானம் செய்யக் கூடாது. ஆனால், இப்படிப்பட்ட கண்களை, மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கலாம். கண்களைத் தானம் செய்வதற்கு முன், இறந்தவர்களின் கண்களின் மேல் ஈரப்பஞ்சு வைத்து, உலராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இறந்த ஆறு மணி நேரத்திற்குள், கண்களைத் தானம் செய்ய வேண்டும்.

- கா.காளீஸ்வரி, கண் அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

என் குழந்தைக்கு, ௩ வயதாகிறது. ஒருநாள் மாலையில், ஆரஞ்சு பழம் சாப்பிட்டாள். அன்று இரவு முழுவதும் வாந்தி எடுத்தாள். குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழம் கொடுக்கலாமா?

- சுப்புலட்சுமி, திருவேற்காடு, சென்னை.

குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழம் தாராளமாக கொடுக்கலாம். அதில் நிறைய சத்துக்கள் உள்ளன. ஆனால், தோலை நீக்கிவிட்டு கொடுக்க வேண்டும். ஆரஞ்சு பழ தோல் சில வேளைகளில் ஜீரணமாகாமல், மந்தத்தன்மையை ஏற்படுத்தும். இதனால், வாந்தி உண்டாகும்.

- வா.மாலதி, பொது மருத்துவர், சென்னை.






      Dinamalar
      Follow us