தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்


PUBLISHED ON : மே 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு வயது 38; சமீபத்தில், ரத்தப் பரிசோதனை செய்து கொண்டேன். அதில், ரத்த தட்டணுக்கள் மிக அதிகமாக, 9,14,000 இருந்தது. தட்டணுக்களின் எண்ணிக்கை சரியாக இருக்க, என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.

ச.காயத்ரி, திண்டுக்கல்


எதற்காக ரத்தப் பரிசோதனை செய்தீர்கள் என்ற காரணத்தைக் கூறவில்லை. எதுவாக இருந்தாலும், இப்போது நீங்கள் முழுமையான, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில் ரத்த வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்களின் எண்ணிக்கை, அளவு, வடிவம் எப்படி உள்ளது என்று தெரிந்துவிடும். இதுதவிர முழுமையான ரத்தப் பரிசோதனையில், MCV/MCH/MCHV/TIBC உட்பட, அனைத்து விவரங்களும் தெரிந்து கொள்ள முடியும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், எந்தப் பிரச்னையும் இல்லை. சமயங்களில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தாலும் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். ஹீமோகுளோபின் எனப்படும் இரும்பு மற்றும் புரதச் சத்து குறைவாக இருந்தால், பல உடல் பிரச்னைகள் வரலாம். அதனால் உடனடியாக முழு ரத்தப் பரிசோதனை செய்து, உங்கள் ஊரில் உள்ள பொது நல மருத்துவர் ஒருவரிடம், முதலில் ஆலோசனை பெறுங்கள்.

டாக்டர் சுந்தர்ராமன்

பொதுநல சிறப்பு மருத்துவர், சென்னை


தேங்காயில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், சமையலில் தேங்காயை பயன்படுத்தவே கூடாது என்கின்றனரே... இது சரியா? தவிர உணவில் தேங்காய் அதிகமாக சேர்த்தால் சர்க்கரை நோய் வரும் என்றும் கூறுகின்றனரே... விளக்கம் தாருங்கள்.

ச.ராமநாதன், கோவை


நம் நாட்டில் அதிகமாக பயன்படுத்திய எண்ணெய் இரண்டு தான். ஒன்று நல்லெண்ணெய்; மற்றொன்று தேங்காய் எண்ணெய். 'தமிழரும், தாவரமும்' என்ற பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய நூலை, எடுத்துப் பார்த்தால் தெரியும், எந்த எண்ணெய் எவ்வளவு காலம் இந்த நாட்டில் இருந்தது என்று.

ஆனால் நாம், 'தேங்காயா, அதைப் பக்கத்திலேயே கொண்டு வராதே, கொலஸ்ட்ரால் ஜாஸ்தி' என்கிறோம். தேங்காயில், 'சேச்சுரேட்டட் பாட்' எனப்படும் நிறைவுற்ற கொழுப்பு அமிலமான, லாரிக் அமிலம் இருப்பது உண்மை தான். ஆனால், இது நேரடியான கொழுப்பு கிடையாது. எந்த தாவர எண்ணெயிலும் நேரடியான கொழுப்புச் சத்து கிடையாது. விலங்குகளில் இருந்து பெறப்படும் எண்ணெயில் தான் நேரடி கொழுப்பு உள்ளது.

லாரிக் அமிலத்தில் இருந்து, மோனோ லாரிக் என்ற ஒரு அமிலத்தை பிரித்து எடுத்திருக்கின்றனர். இந்த மோனோ லாரிக், நேரடியாக மாரடைப்பைத் தடுக்கக் கூடிய பொருள். அதோடு நோய் எதிர்ப்பு சக்தி, அதிகமாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனே லாரிக்கைத் தவிர, இன்னொரு பொருளிலும் இதே போன்ற நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையிலேயே உள்ளது; அது தாய்ப்பால். கொழுப்பை குறைக்க வேண்டும் என்பவர்கள், அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள், தேங்காயை தவிர்க்கலாம்.

ஆனால், குழந்தைகளுக்கு கட்டாயம் தேங்காய் தர வேண்டும். ஆசிய மரபணுக்கள் கொண்ட அமெரிக்காவில் பிறக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகளுக்கு, பிறந்தது முதல் 4, 5 வயது வரை, 'அடோபிக் டெர்மடைடிஸ்' என்ற தோல் வியாதி மிக அதிகமாக வரும். இந்த பிரச்னைக்கு, தேங்காய் சட்னியை அடிக்கடி உணவில் சேர்ப்பதும் காய்கறிகளில் தேங்காய் பூவைத் தூவிக் கொடுப்பதும் தேங்காய் பாலை குடிக்கக் கொடுப்பதும் தான் ஒரே தீர்வு.

டாக்டர் கு.சிவராமன்

சித்தா சிறப்பு மருத்துவர், சென்னை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us