உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 13, 2016
அ நிறம் | அளவு
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் தொப்பையைக் குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறதே! அது என்ன சர்ஜரி? பக்க விளைவுகள் வருமா? எவ்வளவு செலவாகும்? விவரங்கள் தர முடியுமா?
சாமு, சேலம்.
உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்ற நிலையில், இந்த அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில், நான்கு வகைகள் உள்ளன. அவரவர் உடல் நலம், வயது, உடல் சார்ந்த பிரச்னைகள், ஆணா, பெண்ணா என்பதைப் பொறுத்து, எந்த மாதிரியான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை, டாக்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியர்களின் உடல் தன்மைக்கு laparascopic sleeve gastrectomy, gastric bypass ஆகிய இரண்டு அறுவை சிகிச்சைகள் பொருத்தமானவை. சம்பந்தப்பட்டவருக்கு, இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையுமோ செய்கிறோம். முதல் வகையில், மொத்தமுள்ள வயிற்றின் அளவில், நான்கில் மூன்று பங்கைக் குறைத்து விடுவோம். இதனால் வழக்கமாக சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும். உடல் எடையை மட்டும் குறைப்பது என்றால், இந்த முறை போதுமானது. இரண்டாவது முறையில், சிறுகுடல் நீளத்தைக் குறைத்து விடுவோம். இதனால் உணவில் இருந்து உறிஞ்சப்படும் சத்துகள் குறைந்துவிடும். இந்த முறையில், உடல் எடை மட்டும் குறைவதில்லை. சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் incretin ஹார்மோன் நன்றாகச் சுரந்து, போதுமான அளவு இன்சுலின் சுரக்க கணையத்தைத் துாண்டும். இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டால், உடல் பருமனால் வரும் பிரச்னைகள் வராது. அதிகப்படியான உடல் எடை,
30 முதல் 50 சதவீதம் குறையும். அடுத்த ஆறு மாதங்கள் முதல் ஓராண்டிற்குள், 77 சதவீதம் உடல் எடை குறையும். குறைந்த உடல் எடை, அடுத்த, 14 ஆண்டுகளுக்கு ஏறாது. அறுவை சிகிச்சைக்குப்பின், உணவின் அளவு குறைவதால், தேவையான ஊட்டச்சத்துக்களும் குறையும். இதற்கு டாக்டரின் ஆலோசனைப்படி, வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். லேப்ராஸ்கோபிக் முறையில் செய்வதால், தழும்பு இருக்காது. பக்க விளைவுகளும் இல்லை. செலவு சில லட்சங்கள் ஆகும்.
டாக்டர் பி.ராஜ்குமார்
கேஸ்ட்ரிக் ஒபிசிட்டி சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை.
ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன? பிரபலமானவர்கள், குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை பாதுகாத்து வைக்கின்றனரே? அதனால் என்ன பலன்?
உஷா, மதுரை.
தொப்புள் கொடியை வெட்டியவுடன், அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. தொப்புள் கொடியில் உள்ள திசுக்களில், 'மெசன்கியல்' எனப்படும் சக்தி வாய்ந்த செல்கள் உள்ளன. இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள். இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடம்பில் உள்ள லட்சக்கணக்கான செல்கள் உருவாகி உள்ளன. உடலில் உள்ள அனைத்து உறுப்புகள் உருவாவதற்கும், இதுதான் அடிப்படை. இந்த செல்லை வைத்து செய்யப்படுவது தான், ஸ்டெம் செல் சிகிச்சை. தொப்புள் கொடியை பாதுகாத்து வைத்தால், அதில் உள்ள ரத்தத்தையும் செல்களையும் தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிகிச்சை மூலம் 80 சதவீதத்திற்கும் மேல் நோயின் பாதிப்பு குறைந்து, குணமாகும் என்று உறுதியாகியுள்ளது. ஸ்டெம் செல்களை பாதுகாப்பதற்கென்றே உள்ள வங்கிகளில், இதை 20 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க முடியும். இதற்கென்று பிரத்யேக வங்கிகள் உள்ளன. அவர்களை தொடர்பு கொண்டால், அதற்கான கட்டணம் பற்றி சொல்வர்.
டாக்டர் சரண்யா நாராயண்
மெடிக்கல் டைரக்டர், ஜீவன் ரத்த வங்கி.