PUBLISHED ON : ஜூலை 13, 2016

மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாக கொண்ட, லாரல் மரத்தின் இலை தான் பிரிஞ்சி இலை.'ஒரு பிரிஞ்சி இலையை எடுத்து எரித்தால், அதிலிருந்து வரும் புகை, 5 நிமிடத்தில் மன அமைதியும், மன அழுத்தத்தில் இருந்து விடுதலையும் தருகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிக்கும் காரணிகள், பிரிஞ்சி இலையில் இருக்கின்றன' என, பிரபல ரஷ்ய விஞ்ஞானி கென்னடி மால்கவ் கண்டுபிடித்துள்ளார். பிரிஞ்சி இலை, வாசனைக்காக உணவிலும், தோல் சிகிச்சை மூலிகையாகவும் பயன்படுகிறது. இயற்கையாகவே இந்த இலையில், மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது. ஒரு காய்ந்த பிரிஞ்சி இலையை எடுத்து, ஒரு அறையில் எரிய வைத்துவிட்டு, 10 நிமிடம் வெளியே சென்று, மீண்டும் அந்த அறையில்
நுழையும்போது, அங்கு ஓர் அமைதியான சூழலை உணரலாம். எரிந்த இலையின் புகையில், நேர்மறையான ஆற்றல் ஓட்டம் உருவாக்கப்படுவதால், மன அமைதியை தருவதாக கூறப்படுகிறது.
