தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தேடி வரும் ஆரோக்கியம்!

தேடி வரும் ஆரோக்கியம்!

தேடி வரும் ஆரோக்கியம்!


PUBLISHED ON : ஜூலை 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓடி விளையாட்டு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

பாரதி.


நம்மூரில் பல இடங்களில், விளையாட்டு மைதானங்களே இல்லாது இருக்கும் போது, எங்கிருந்து விளையாடுவது என்ற கேள்வி, பலருக்கு எழாமல் இல்லை. கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்துக் கொண்டும், தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டும் இருக்கும் பிள்ளைகளால், வருங்காலத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது, இப்போதைக்கு கவலை அளிக்கும் விஷயமாக மாறி விட்டது.

இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், உடற்பயிற்சி மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. சீனாவில், கராத்தே பயிற்சி இல்லாத பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள்.

எல்லா பள்ளிக்கூடங்கள் மற்றும் வீடுகளில், கராத்தே செய்வதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு, அவர்கள், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால்... நாம்...! உடற்பயிற்சி செய்யாமல், நோய் வந்த பிறகு தான், இதன் நினைப்பே வருகிறது.

தினமும் 30 நிமிடங்கள்

தினமும், காலை மற்றும் மாலையில் குறைந்தது, 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதில், நடந்து செல்லுதல், மிதவேக ஓட்டம், ஸ்கிப்பிங் போன்றவற்றை வழக்கமாக மேற்கொள்ளலாம். முப்பது நிமிடங்களும், முழுமையான உற்சாகத்தோடு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதனால், மன தைரியம், நிம்மதி, உயர்வான சிந்தனை, சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஏற்படும்.

உடலின் வடிவமைப்பும் அழகாகும். பணியில் சுறுசுறுப்பு, பொலிவான முகம், நேர்மறையான சிந்தனைகள் உடற்பயிற்சியால் கிடைக்கின்றன.

நமக்கு சரி என்று படக்கூடிய விஷயங்களை, துணிவுடன் செய்யக்கூடிய ஆற்றல் ஏற்படுகின்றது. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆரோக்கியம் குறித்து சிந்திக்க வேண்டும்.

பயிற்சியில் கிடைக்கும் பலன்கள்

இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. 50 சதவீதம் நீரிழிவு, புற்றுநோய், அதிர்ச்சி, மனஅழுத்தம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க முடிகிறது. 30 சதவீதம் இள வயது மரணத்தை குறைக்க முடியும். 35 சதவீதம் மன அழுத்தம் குறையும். 50 சதவீதம், குடல் புற்றுநோய் ஏற்படுவது குறையும். 20 சதவீதம், மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பு குறையும். 68 சதவீதம், பின் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறையும். 30 சதவீதம் இளமையை பாதுகாக்க முடியும்.

பயிற்சி எப்படி?

அதிகாலையில் எழுந்திருத்து, நடக்க ஆரம்பிக்கலாம். வீட்டில் காணப்படும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். நின்றபடி, தங்கள் வேலைகளை மேற்கொள்ளலாம். தோட்ட வேலைகளை நாமே செய்யலாம். பிள்ளைகளுடன் விளையாடுவது உற்சாகம் தரும். ஒரே இடத்தில், நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்காமல், 30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது, எழுந்து நடக்க வேண்டும்.

முக்கியமான விஷயமாக, உணவருந்திய உடனடியாக உறங்கவோ, உட்காரவோ கூடாது. இனியென்ன...

உங்கள் ஆரோக்கியம், உங்கள் கையில் தானே...!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us