தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/காலையில் எழுந்த உடன்...

காலையில் எழுந்த உடன்...

காலையில் எழுந்த உடன்...


PUBLISHED ON : ஜூலை 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுவாக, காலையில் எழும் போதும், சோம்பல் முறித்து விடுவது இயல்பு. அவ்வாறு, முறிக்கும் போது, மெதுவாக செயல்பட வேண்டும். முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக் கூடாது. நீண்ட மூச்சு பயிற்சியின் மூலம், அந்நாளை குதூகலமாக வைக்க உதவும்.

காலையில் எழுத்த உடன், சிறிது நீர் அருந்துவது நல்லது; உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீர் வெளியேற்றி விடும். எழுந்த உடனேயே, நல்ல சிந்தனைகளை, முக்கிய வேலைகளில் ஈடுபடுத்துவது பலன் தரும். 20;20;20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.

அவை, 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும்; நாளிதழ்களை படிக்கும் போது, செய்திகளை தெரிந்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

காலை உணவை தவிர்ப்பது, மிகவும் தவறான செயல். காலையில், ரத்தத்தில், சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது. அதை சரி செய்யவே, காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவசியமான ஒன்று. இதை தவிர்ப்பவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படும்.

காலையில், தானிய வகைகளை உட்கொள்வது மிகவும் சிறந்தது. ஆண்கள் சிலர், காலை எழுந்தவுடன், புகைப்பிடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர். புகை பிடிப்பது, உடலுக்கு தீங்கானது என்ற போதும், காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பது, மிகவும் ஆபத்தான செயல். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

காலையில் எழும் போது, அன்றைய நாளுக்கான வேலையை நினைத்து, ஏதேனும் டென்ஷன் ஏற்படுத்தும் விஷயத்தை கையில் எடுத்தீர்களே என்றால், அந்த நாள் இனிமையாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம். எனவே, முடிந்த வரை, மனதை பக்குவமாக வைத்துக் கொள்ள பழகி கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us