sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஆக 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

என்னுடைய 13 வயது மகளுக்கு 20 வயது பெண்ணிற்குரிய மார்பக வளர்ச்சி உள்ளது. இதை எந்த சிகிச்சையினால் சரி செய்ய முடியும்? சிகிச்சையினால் பின் விளைவுகள் ஏதும் இல்லையா? பதில் அளிக்கவும்.

நிர்மலா, வீதிக்காடு, பெருமாநல்லுார்

இரண்டு பக்க மார்பகங்களின் வளர்ச்சியும் பெரிதாகவே உள்ளதா, அல்லது ஒரு பக்க மார்பகம் மட்டும்தானா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. முதலில் உங்கள் மகளை ஒரு மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மார்பகங்களில் கட்டி ஏதேனும் இருக்கிறதா என்பதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுதவிர, இந்த அதிகப்படியான வளர்ச்சியினால் மூச்சுவிடுவதில் சிரமம், பாரமாக உணர்வது போன்ற பிரச்னைகள் ஏதும் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பிரச்னை இருக்கிறது அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற நிலையில்தான் Reduction mamoplasty என்ற முறையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பிரச்னை எதுவும் இல்லை என்றால் அதீத வளர்ச்சி பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை. இந்த வயதில் ஹார்மோன் மாற்றங்களினால் பிரச்னை வர வாய்ப்பில்லை. மார்பகங்களின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பொதுவான நியதி எதுவும் கிடையாது. உடல்ரீதியான பிரச்னை எதுவும் கிடையாது. ஆனால், வயதுக்கு மீறிய வளர்ச்சி இருப்பது மனரீதியாக சில சங்கடங்களைத் தருகிறது என்றால், நீங்கள், உங்கள் மகள் இருவருமே ஒரு மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டியதும் அவசியம். உடைகள் அணிவதில் மாற்றங்கள் உட்பட தேவையான ஆலோசனைகளை அவர்கள் தருவார்கள்.



டாக்டர் எம்.ரவிக்கிரண்


நாளமில்லா சுரப்பி நிபுணர், சிம்ஸ், சென்னை

என் வயது 40. முதல் பிரசவம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பிரசவத்திற்குப் பிறகு என் வயிறு பெருத்துவிட்டது. டாக்டரிடம் ஆலோசித்தபோது, ஹெர்னியா பிரச்னை இருப்பதாகக் கூறி, படுக்கும்நேரங்களில் வயிறு நன்கு அழுத்தும்படி குப்புறப் படுக்கச் சொன்னார். ஆனால் எல்லா நேரமும் அப்படி படுக்க முடிவதில்லை. வயிற்றில் வலி எதுவும் இல்லை. அறுவை சிகிச்சை வேண்டாம் என்று டாக்டர் கூறினார். வயிற்றிற்கான உடற்பயிற்சி மூலம் ஹெர்னியா அதிகமாவதைத் தடுக்க முடியுமா?

எம்.சந்திரா, மேலுார்.

வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், கருக்குழாயில் உள்ள தசைகள் பலமிழந்து விடுவது உட்பட பல காரணங்களால் ஹெர்னியா வருகிறது. மிகச் சிறிய அளவில் வயிற்றில் வீக்கம் இருந்து, வலி, வேறு தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால் பிரச்னையில்லை. நீங்கள் செய்வதுபோல குப்புறப்படுப்பதால் ஹெர்னியாவை சரி செய்து விட முடியாது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நீண்ட நாள் மலச்சிக்கல், தொடர்ந்து இருமல், சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு, இருந்தாலும் ஹெர்னியா வரலாம். இது தசைகளில் ஏற்படும் பிரச்னை என்பதால், மருந்தினால் சரி செய்ய இயலாது. தாங்க இயலாத பிரச்னை என்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். குப்புறப்படுத்து ஹெர்னியாவை போக்க முயற்சிக்க வேண்டாம்.

டாக்டர் அமுதா ஹரி

மகப்பேறு மருத்துவர், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us