PUBLISHED ON : ஆக 28, 2011
உடல் எடையை அதிகரிக்க சித்த மருத்து வத்தில் மருந்து சொல்லவும். ஏ.ஜி.பானு, மந்தாரக்குப்பம்:
தேறாத உடலை தேற்றுவதற்கு, தேற்றான்கொட்டை லேகியம் உதவும். சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். ஐந்து கிராம் (நெல்லிக்காய் அளவு) எடுத்து காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட்டு, பாலை குடிக்க வேண்டும். இதன் மூலம், உடல் எடை அதிகரிக்கும். பனங்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சுட்டோ, வேக வைத்தோ, வெல்லம் சேர்த்தோ சாப்பிடலாம். எள்ளை வறுத்து பொடியாக்கி, நாட்டுவெல்லம் கலந்து சாப்பிட்டால், பசி அதிகரிக்கும். உடல் பருமனாகும். மேலும், ரத்த செல்கள் சீக்கிரம் முதிர்வடைவதை தடுக்கும்.
உணவுக்குழாயில் அறுவை சிகிச்சை எனில், வயிற்றை கிழிக்க வேண்டுமா?
கதிரவன், கவுண்டம்பாளையம்.
பல புதிய சிகிச்சை முறைகள் உள்ளன. பொதுவாக லேப்ராஸ்கோபி முறையில் சிகிச்சை மேற்கொள்வதால் ரத்தம் வீணாவதில்லை. இரண்டு மூன்று சிறிய துளையிட்டு, உணவுக்குழாயில் ஆபரேஷன் மேற்கொள்ள இயலும்.
