PUBLISHED ON : அக் 24, 2021

அறுவை சிகிச்சை செய்த போது, முதுகில் குத்திய ஊசியின் வலி, ஐந்து, 10 ஆண்டுகளுக்கு பின், சிலருக்கு 65, 70 வயதிலும் இருப்பதாக சொல்கின்றனர். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் தசைகள், மூட்டுகளில் மாற்றங்கள் ஏற்படும். பிளசென்டா, பனிக்குட நீர், கொழுப்பு சேர்ந்து, உடல் எடை 12 - 15 கிலோ அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில், 'ரிலாக்சின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது; இது, இடுப்பு எலும்பு தசைகளை தளர்த்தி, 'ரிலாக்ஸ்' செய்யும்; குழந்தை சுலபமாக வெளியில் வருவதற்கு உதவியாகவும் இருக்கும். இது, முதுகைச் சுற்றியுள்ள ஜவ்வு, சிறிய மூட்டு இணைப்புகளையும் தளர்த்தி விடுகிறது.
குழந்தை பிறந்த பின், உடற்பயிற்சி செய்து, தளர்ந்த தசைகளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்; அப்படி செய்யாவிட்டால் வலி அப்படியே இருக்கும். முதுகு தண்டை சுற்றியுள்ள தசைகளை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஆதாரம்: ஜர்னல் ஆப் அபஸ்டெரிக்ஸ் அண்டு கைனகாலஜி
