தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முதுமையை வதைக்கும் மூட்டு வலிக்கு தீர்வு

முதுமையை வதைக்கும் மூட்டு வலிக்கு தீர்வு

முதுமையை வதைக்கும் மூட்டு வலிக்கு தீர்வு


PUBLISHED ON : பிப் 02, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூட்டு, கை, கால், தோள்பட்டை வலியால் முதியவர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனரே ஏன்?

வயது முதிர்ச்சியால் இப்பிரச்னை வருவது இயல்புதான். பொதுவாக 35 வயதிற்குள் எலும்பு வளர்ச்சி அடைவது நின்றுவிடும். 40 வயதிற்குப் பிறகு படிப்படியாக எலும்பில் தேய்மானம் ஏற்படத் துவங்கும். இத்தேய்மானம் தான் கை, கால் மூட்டு பகுதிகள், தோள்பட்டையில் தீராத வலியை ஏற்படுத்துகிறது. 50 வயதை கடந்த பலரும் இந்த வலியால் அவதியுறுகின்றனர்.

ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படுகிறதே அதிலும் நடுத்தர வயதிலேயே அவர்களை மூட்டு வலி பாதிப்பது ஏன்?

வயது முதிர்ச்சியால் எலும்பு தேய்மானம் ஏற்படும். இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் பெண்களுக்கு இப்பாதிப்பு முதுமைக்கு சற்று முன்பாகவே (அதாவது 45 முதல் 50 வயதிலேயே) ஏற்படும். ஏனென்றால் இக்காலத்தில் அவர்களுக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும். இதனால் பல்வேறு வகையான ஹார்மோன்கள் சுரப்பது குறையும். அதோடு உடலில் கால்சியம் சத்து குறைபாடும் ஏற்படும். எலும்பு வலுப்பெறுவதற்கு முக்கிய பங்காற்றும் இச்சத்து குறைவதால் தானாகவே எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே தான் ஆண்களுக்கு முன்பாகவே பெண்கள் மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர்.

குளிர்காலத்தில் மூட்டு, தோள்பட்டை வலி அதிகம் ஏற்படுகிறதே இதற்கு காரணம் உண்டா?

காரணம் இருக்கிறது. கை, காலில் ஒவ்வொரு மூட்டுகளிலும் இணைப்பிற்கான குருத்தெலும்புகள் உள்ளன. உராய்வை தடுப்பதற்காக கொழுப்பு போன்ற திரவம் அதில் உற்பத்தியாகிறது. இத்திரவம் இல்லையென்றால் எலும்புகளிடையே உராய்வு ஏற்பட்டு தேய்மானம் உண்டாகும். குளிர்காலத்தில் இத்திரவம் உறைந்துவிடுவதால் உராய்வு உண்டாகி வலி ஏற்படுகிறது.

மூட்டு, எலும்பு வலியில் இருந்து நிவாரணம் பெறமுடியுமா?

இவ்வலியில் இருந்து விடுதலை பெற எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் நிறைந்த பால் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் சத்துக்கான மாத்திரை, மருந்துகளும் கிடைக்கின்றன. டாக்டர்களின் பரிந்துரையோடு இவற்றை உட்கொள்ளலாம். அவ்வப்போது வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். தினமும் பிஸியோதெரபி பயிற்சி மேற்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி இருப்போர் கடினமான வேலைகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் வலி இன்னும் தீவிரமாகும்.

முதுமையில் வரும் மூட்டு வலியை தவிர்க்க வழி உண்டா?

பொதுவாக உடல் வலுவாக இருந்தால் மூட்டு வலி எளிதில் அண்டாது. எனவே இளமையிலேயே சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி அளித்து வந்தால், முதுமையில் சுகமான வாழ்வு கிடைக்கும். சிறு வயதிலேயே உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது அவசியம்.

டாக்டர் பாலகுருசாமி

பொது மருத்துவர்

மதுரை

75400 50088

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us