தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூட்டுவலிக்கு தீர்வு

மூட்டுவலிக்கு தீர்வு

மூட்டுவலிக்கு தீர்வு


PUBLISHED ON : அக் 10, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்தான உணவு : மூட்டு வலி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை சரியான ஊட்டச்சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி இல்லாதது, உடல் எடையை சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை காரணங்களில் சில.



இதனால் ஏதாவது அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினால் போதும், தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு வந்து, பெரும் தொந்தரவை ஏற்படுத்திவிடும்.



ஆகவே இத்தகைய இடங்களில் வலி ஏற்படாமல் இருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.



சாலமன்: கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 உள்ளது. அதிலும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆகவே இதனை அடிக்கடி உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து சரியாகிவிடும்.



பெர்ரிஸ்: ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரிகள் மருத்துவ குணம் நிறைந்த பழங்கள். அதிலும் இவை மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிஷன் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.



ஏனெனில், அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் புண்களை சரிசெய்யுமளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.



காய்கறிகள்:

உடலில் ஒமேகா- 3 பேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டு வலிகள் ஏற்படும். ஆகவே அவற்றை சரிசெய்ய, கீரை, ப்ராக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை அதிகளவில் சாப்பிட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் புட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலி ஏற்படாமல் தடுக்கலாம்.



நட்ஸ்: பாதாம், வால்நட் மற்றும் மற்ற விதைகளான பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேகா- 3 பேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது.



இதனால் மூட்டுகளில் ஏற்படும் புண் மற்றும் வலி நீங்கும். ஆகவே இனிமேல் ஜங்க் புட் சாப்பிடுவதை தவிர்த்து, இவற்றை சாப்பிடுவதை தொடங்குங்கள்.



பால் பொருட்கள்: உடலில் எலும்புகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க கால்சியம் சத்துக்கள் இருக்க வேண்டும். அவை குறைவாக இருந்தால் அடிக்கடி எலும்புகளில் வலி, சுளுக்கு ஏற்படும்.



ஆகவே அத்தகைய வலிகள் வராமல் இருக்க பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும்.



அதிலும் ஸ்கிம் மில்க்கை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்காமலும், உடலில் நீரிழிவு ஏற்படாமலும் தடுக்கலாம்.



ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயிலின் மகிமைகளை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.



ஆகவே சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட, ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்தால் இதயத்திற்கும், எலும்புகளுக்கும் நல்லது.



ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது.



ஆரஞ்சு ஜூஸ்: அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதோடு, எந்த ஒரு வலியும், புண்களும் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படாமல் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us