PUBLISHED ON : அக் 30, 2019

'நெட் பிளிக்ஸ்'சிற்கு அடிமையாவது அதிகரித்து உள்ளதா
இணையதள வீடியோ பார்ப்பதில், 12-21 வயது உள்ளவர்கள், அடிமையாவது அதிகரித்து உள்ளது.
பெங்களூருவில் உள்ள, 'நிம்ஹேன்ஸ்' - தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் ஆராய்ச்சி மையத்தில், வேலையில்லா பட்டதாரி இளைஞர், தானாகவே முன் வந்த, 'தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேல், இணையதளத்தில் வீடியோ பார்க்கிறேன்.'
இதிலிருந்து வெளியில் வர உதவுங்கள் என, மருத்துவ உதவி கேட்டிருக்கிறார். சர்வதேச அளவில், தொடர்ச்சியாக, ஆறு மணி நேரத்திற்கு மேல், இணையதளத்தில் வீடியோ பார்ப்பதே, இதுவரையிலும் அதிகபட்ச நேரமாக இருந்தது.
இதற்கு என்ன காரணம்
இணையதள வசதிவரும் முன், குறிப்பிட்ட சீரியலில், ஒரு, எபிசோட் பார்க்க, ஒரு வாரம் குறைந்த பட்சம் 24 மணி நேரமாவது காத்திருக்க வேண்டும்.
இதற்கு, நம்முடைய மூளையும் பழகி இருந்தது. ானால், தற்போத, எதற்கும் காத்திருக்க தேவையில்லை.
எல்லாவற்றையும், ஒரே நேரத்தில் பார்க்க வசதியாக வெளியிடுகின்றனர்; நாமும் மொத்த சீரியலையும், இடைவெளி இல்லாமல், பார்த்து முடித்து விடுகிறோம்.
ஒரு நாளைக்கு ஒரு எபிசோட் என, ஏன் நிறுத்த முடியவில்லை
ஒரே நேரத்தில், மொத்த சீரியலையும் பார்த்து விடவேண்டும் என்ற விருப்பத்திற்கும், மூளைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஒரு எபிசோட் முடியும் போது அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக முடிப்பர்.
அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி வரும் போது, நம்மூளையில், சி.ஆர்.ஹெச்., என்ற வேதிபொருள் சுரக்கும். இது, மன அழுத்தத்தை தருவதோடு, இதோ போன்று, பிற வேதிப் பொருட்களையும் சுரக்கத் தூண்டும்.
இப்படி மன அழுத்தத்தை தூண்டும் வேதிப் பொருட்கள், அதிகமாக சுரக்கும் போது, அன்று இரவு தூக்கம் வராமல், இப்போதே மொத்த சீரியலையும் பார்த்து முடித்து விடலாம், என தோன்றும்.
ஒரு எபிசோட் மட்டும் பார்க்க நினைத்த நாம், கடைசியில், அந்த சீசனில் வெளியான சீரியலின், மொத்த எபிசோடுகளையும் பார்த்து முடித்து விடுவோம்.
இந்த வசதி இல்லாத போது, எப்படி நம்மால் காத்திருக்க முடிந்தது?
இதனால் தான், ஒரு விஷயத்தை பெறுவதற்கு, பொறுமையாக காத்திருக்க வேண்டும் என, மூத்தோர்கள் கூறுவர்.
உணவுக்கும் இது பொருந்தும். அசைவ உணவோ, பிரியாணியோ சாப்பிட வேண்டும் என்றால், வார கடைசி வரை, காத்திருக்க வேண்டும் என்றநிலை இருந்தது.
ஆனால் தற்போத, இந்த நிமிடம் பிரியாணி சாப்பிட வேணடும் என தோன்றினால், உடனே, ஆர்டர் செய்ய முடியும்.
விரும்பிய விஷயம், உடனே கிடைக்கும் போது, மூளையில் மகிழ்ச்சி வேதிப் பொருளான, டோபமின் உடனே சுரந்து, சந்தோஷமான உணர்வை தருகிறது.
சந்தோஷமான வேதிப் பொருள் சுரப்பது, நல்ல விஷயம் தானே
மூளை நமக்கு இயற்கையாக கொடுக்கும் நேர்மறையான, சந்தோஷமான விருது, டோபமின்.
முழு ஈடுபாட்டுடன், கடினமாக உழைத்து தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெறுகிறோம். அந்த நேரத்தில் டோபமின் சுரப்பதால், மகிழ்ச்சியான உணர்வு வருகிறத.
இதே உணர்வு, எப்போதோ ஒருமுறை, நமக்கு பிடித்த உணவு சாப்பிடும் போதும் வரும். ஆனால் தற்போது, போடமின் சுரந்த படியே உள்ளது.
இயற்கையாக, டோபமின் சுரப்பது தான் ஆரோக்கியமானது. எந்த விஷயத்திற்கும் அடிமையானாலும், இயற்கையாக சுரக்கும் டோபமினை விடவும், செயற்கையா பல மடங்கு அதிகமாக சுரக்கும்.
இது நல்லதல்ல. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே, நெட் பிளிக்ஸ் பார்க்க வேண்டும் என்ற, சுய கட்டுப்பாடு அவசியம்.
- டாக்டர் யாமினி கண்ணப்பன்
மனநல மருத்துவர்,
காவேரி மருத்துவமனை,
சென்னை
044 - 4000 6000